சீயாத்தமங்கை வன்மீகநாதர் கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
சீயாத்தமங்கை வன்மீகநாதர் கோயில்,
சீயாத்தமங்கை, நாகை வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 609702.
இறைவன்:
வன்மீகநாதர்
இறைவி:
நீலோத்பலாம்பாள்
அறிமுகம்:
சன்னாநல்லூர் – திட்டச்சேரி சாலையில் திருமருகல் தாண்டியதும், பிரதான சாலையின் ஓரத்தில் உள்ளது இந்த சீயாத்தமங்கை வன்மீகநாதசுவாமி கோயில். சன்னாநல்லூரில் இருந்து பன்னிரண்டு கிமீ தூரத்தில் உள்ளது. இது நாகப்பட்டினம் வட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும். இங்கு இரு சிவாலயங்கள் உள்ளன. பிரதான சாலையில் உள்ள சிவாலயம், பாடல் பெற்ற சிவாலயம் பிரதான சாலையில் இருந்து மூன்று கிமீ தூரம் வடக்கு நோக்கி செல்லவேண்டும், கோயில் சீயாத்தமங்கை என அழைக்கப்படுகிறது. இக்கோயில் திருமருகல் இரத்தினகிரீசுவரர் கோயிலின் உப கோயிலாக விளங்குகிறது.
இக்கோயிலின் மூலவர் வன்மீகநாதர் கிழக்கு நோக்கியும், . இறைவி நீலோத்பலாம்பாள் தெற்கு நோக்கியும் உள்ளனர். முன்பு மூன்று பிரகாரங்களை கொண்ட பெரிய கோயிலாக இருந்துள்ளது. காலம் எல்லாவற்றையும் அழிக்க மீதமிருப்பது இரு கருவறைகள் மட்டுமே, மூன்று ஆவரணங்களில் மூன்று பைரவர் என இருந்ததாம். தற்போது வடகிழக்கில் மேற்கு நோக்கிய மகா காலபைரவர் தனி சன்னதி கொண்டுள்ளார். இதனால் இக்கோயிலை மகா காலபைரவர் கோயில் என்று கூறுகின்றனர். மற்ற இரு பைரவர்கள் அருகில் உள்ளன. விநாயகர், முருகன், இருவரும் இறைவன் கருவறை வாயிலில் சிறு மாடங்களில் உள்ளனர். ஒரு தனித்த விநாயகர் தென்மேற்கில் உள்ளது. கருவறை கோட்டத்தில் தென்முகன், லிங்கோத்பவர், பிரம்மன், துர்க்கை, உள்ளனர். சண்டிகேஸ்வரர் தனி சன்னதியாக உள்ளது. இங்கு நவக்கிரக சன்னதி கிடையாது. மூன்று தேய்பிறை அஷ்டமி தினங்களில் இந்த மகா காலபைரவரை வணங்குவோருக்கு வேண்டியது வேண்டிய வண்ணம் கிடைக்கிறது.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சீயாத்தமங்கை
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி