சிவபுரம்!!

சிவபுரம் சென்னை பெங்களூர் சாலையில் சென்று மேற்கு திசையில் திரும்பி பேரம்பாக்கம் மற்றும் கூவம் அருகில் அமைந்துள்ளது.இந்த ஊரின் சோழர் கால பெயர் உரோகடம்.
இந்த உரோகடம் என்னும் கிராமம்,புரிசை நாட்டில், மனையிற் கோட்டத்தில், ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தில் அமைந்திருந்த சிற்றூர்.
இங்கு இராஜேந்திர சோழர் “ஸ்ரீ இராஜராஜ ஈஸ்வரமுடைய மகாதேவருக்கு” இரண்டு விளக்குகள் எரிக்க 180 ஆடுகள் நிவந்தமாக அளித்ததை அவருடைய எட்டாம் ஆட்சியாண்டு கல்வெட்டுக் கூறுகிறது.
இந்த கோவில் இராஜராஜ சோழன் காலத்தில் தொடங்கப்பட்டு இராஜேந்திர சோழன் காலத்தில் முடிக்கப் பட்டிருக்க வேண்டும்.
முழுவதும் கருங்கல்லால் கட்டப்பட்ட இக்கோவில் கோக்ஷ்ட தெய்வங்கள் மிக அழகு வாய்ந்தவை.
