சிதம்பரம் திருக்களாஞ்சேரி பிரம்மபுரீஸ்வரர் சிவன்கோயில், கடலூர்

முகவரி :
திருக்களாஞ்சேரி பிரம்மபுரீஸ்வரர் சிவன்கோயில்,
திருக்களாஞ்சேரி, சிதம்பரம் வட்டம்,
கடலூர் மாவட்டம் – 608001
இறைவன்:
பிரம்மபுரீஸ்வரர்
இறைவி:
பிரகன்நாயகி
அறிமுகம்:
தில்லையில் இருக்கும் ஒவ்வொரு மணற்துகளுமே சம்பந்தர் கண்ணுக்கு சிவலிங்கமாக தெரிந்தது. அதனால் தில்லையில் எத்தனை சிவவடிவங்கள் உள்ளன என எவராலும் அறுதியிட்டு கூற இயலாது. இதோ நாம் காணும் இந்த திருக்களாஞ்சேரி தில்லையின் வடபுற பகுதியாகும். இதனை திருக்களாஞ்சேரி, சிங்காரதோப்பு, பரமேஸ்வர நல்லூர் எனவும் அழைக்கின்றனர்.
கடலூர் மார்க்கமாக சிதம்பரத்தில் நுழையும் போது வலது புறம் வெளி வட்ட சாலை பிரிகிறது. அந்த சாலையில் சில நூறு மீட்டர்கள் சென்றால் வலதுபுறம் சுபம் கேஸ் ஏஜன்சி இருக்குமிடத்தின் அருகில் உள்ளது இந்த திருகளாஞ்சேரி சிவாலயம். கோயில் ஒரு ஏக்கர் பரப்புடையது, கோயில் முகப்பை தாண்டியவுடன் பெரிய அரசமரத்தின் கீழ் ஓர் லிங்கமூர்த்தி உள்ளார். கோயில் தென்புற மதில் சுற்றினை ஒட்டி வடபுறம் நோக்கிய ஓர் சிற்றாலயத்தில் ஓர் அம்பிகை உள்ளார்.
இந்த ஆலயத்தின் இறைவனின் பெயர் பிரம்மபுரீஸ்வரர். வசிஷ்ட்ட முனிவர் குடிலமைத்து தங்கி பூசித்த லிங்கம். மேலும் இங்குள்ள தீர்த்த குளம் தில்லை நடராஜருக்கு உரித்தான தச தீர்த்தங்களில் ஒன்று சிங்காரதோப்பு என்றும். திருக்களாஞ்சேரி எனவும் அழைக்கின்றனர். இந்த சிங்காரத்தோப்பில் உள்ள இக்கோயில் வசிஷ்டர் பூஜை செய்து வழிபட்ட புகழ்கொண்டது இக்கோயிலில் மறைஞான சம்பந்தர் பூஜை செய்து வழிபட்டு அங்கேயே ஜீவசமாதி அடைந்துள்ளார். அவருக்கான ஜீவசமாதி கோயில் இக்கோயிலின் வாயில் அருகிலேயே உள்ளது.
(திருக்களாஞ்சேரி) சிங்காரதோப்பு பிரம்மபுரீஸ்வரர் கோவில் சிறப்பு மிக்க தீர்த்த குளம்.உள்ளது. இந்த குளத்தில் தேவர்கள் நீராடி பிரம்மபுரீஸ்வரரை வழிப்பட்ட சிறப்புமிக்க குளம். பங்குனி வளர்பிறை பிரதமை அன்று தில்லை கோயிலில் இருந்து சந்திரசேகரர் எழுந்தருளி தீர்த்தவாரி அளிப்பார். இக்கோயில் அருகில் மறைஞான சம்மந்தர் திருக்கோயில் அமைந்துள்ளது. பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் கிழக்கு நோக்கியது. இறைவி பிரகன்நாயகி தெற்கு நோக்கியவர்.
மிக பழமையான சோழர்கால கருவறை இறைவன் அழகிய லிங்கமூர்த்தியாக உள்ளார். அம்பிகையும் சிறப்பான வடிவுடன் உள்ளார். கருவறை கோட்டங்களில் விநாயகர், தென்முகன், லிங்கோத்பவர், பிரம்மன், துர்க்கை உள்ளனர். விநாயகர் அருகில் இத்தல இறைவனை பதஞ்சலி, அகத்தியர், திருமால் தன் துணைவியருடன் வணங்கும் கோலம் மற்றும் பிள்ளை திருஞானசம்பந்தர், அப்பர் மாணிக்கவாசகர் புடைப்பு சிற்பமாகஇருப்பதை காணலாம். பிரகாரத்தில் விநாயகர் சிற்றாலயம் சிற்ப தூண் கொண்ட முகப்பு மண்டபத்துடன் உள்ளது. கோயில் கருவறை சுவர்களில் பல சோழர் கால கல்வெட்டுக்கள் உள்ளன. கோயில் இறை திருமேனிகள் சிறப்பாக தினமும் அபிஷேகம் செய்யப்பட்டு பூஜிக்கப்படுகிறது. காலை மாலை என இருவேளை பூஜை நேரங்களில் சில மணி நேரங்கள் திறந்திருக்கும்.












காலம்
1500 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சிதம்பரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
சிதம்பரம்
அருகிலுள்ள விமான நிலையம்
கடலூர்