குமாரசாமி பேட்டை சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில், தர்மபுரி

முகவரி
அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில், குமாரசாமி பேட்டை, தர்மபுரி மாவட்டம் – 636701 தொலைபேசி எண்:04342-266616
இறைவன்
இறைவன்: சிவசுப்ரமணிய சுவாமி
அறிமுகம்
மாசி மாதத்தின் முப்பது நாட்களும், சூரியக் கதிர்கள், சிவசுப்ரமணியரின் மீது விழுந்து வணங்குவது சிறப்பு. நடராஜர் சன்னதிக்கு எதிரில், சென்னகேசவ பெருமாள் காட்சி தருகிறார். அவரைத் தொழுதபடி ஆஞ்சநேயர் தரிசனம் அளிக்கிறார். தவிர விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்கை, சண்டிகேஸ்வரர், இடும்பன், வீரபத்திரர், நலவீரர்கள் ஆகியோரையும் தரிசிக்கலாம்.
புராண முக்கியத்துவம்
சுமார் 300 வருடங்களுக்கு முன்பு, முருகப்பெருமானை நோக்கிக் கடும் தவம் இருந்தார் சித்தர் ஒருவர். தவத்தின் போது ஒருநாள் இரவு, அவருடைய கை வேறு, கால் வேறு, உடல் வேறு எனத் தனித் தனியாகக் கிடந்தது. அதைக் கண்டு ஊரே சிலிர்த்தது; அவரை வணங்கியது. அதையடுத்து, நான் சமாதி நிலையை அடைந்ததும், அந்த இடத்தில் முருகப்பெருமான் சிலை வைத்து, அவருக்கு ஆலயம் அமைத்து வழிபடுங்கள் ! என்று அருளினாராம் சித்தர், அதன்படி ஒருநாள் அவர் சமாதி அடைய அங்கே அழகிய சிவசுப்ரமணிய ஸ்வாமி சிலை வைத்து, ஊர்மக்கள் ஒன்றுகூடி, அங்கே முருகனுக்கு கோயில் அமைத்தனர். அன்று துவங்கி இன்றளவும், அனைவருக்கும் அருளையும் பொருளையும் அள்ளித் தருகிறார் முருகக் கடவுள்.
நம்பிக்கைகள்
தடைபட்ட திருமணம் நடைபெறவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், நினைத்தது எல்லாம் நிறைவேறவும் இங்கு வழிபாடு செய்கின்றனர்.
சிறப்பு அம்சங்கள்
மாசி மாதத்தின் முப்பது நாட்களும், சூரியக் கதிர்கள், சிவசுப்ரமணியரின் மீது விழுந்து வணங்குவது சிறப்பு. இங்கு, தைப்பூசத் திருவிழாவின் போது நடைபெறும் தேரோட்டம் விசேஷமானது. இந்த தேரை வடம்பிடித்து இழுப்பதில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
திருவிழாக்கள்
தைப்பூசத் திருவிழா
காலம்
800 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
குமாரசாமிபேட்டை
அருகிலுள்ள இரயில் நிலையம்
தர்மபுரி
அருகிலுள்ள விமான நிலையம்
பெங்களூர்