குதம்பைநாயனார்கோயில் பஞ்சநதீஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி :
குதம்பைநாயனார்கோயில் பஞ்சநதீஸ்வரர் சிவன்கோயில்,
கூத்தாநல்லூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610102.
இறைவன்:
பஞ்சநதீஸ்வரர்
இறைவி:
தர்மசம்வர்த்தினி
அறிமுகம்:
திருவாரூர் – மன்னார்குடி சாலையில் திருவாரூரிலிருந்து ஒரு 7 கி.மீ தொலைவில் எருக்காட்டூர் பேருந்து நிறுத்தத்தில் திரும்பி பாண்டவை ஆற்றின் பக்கம் 1.5 கி.மீ சென்றால் இக்கோவில் அமைந்துள்ளது. தற்போது குதம்பனார் கோயில் எனப்படுகிறது. தமிழ்நாட்டில் வாழ்ந்த சித்தர்களில் 18 பேர் தொகுக்கப்பட்டு பதினெண்-சித்தர் எனக் குறிப்பிடப்பட்டனர். அவர்களில் ஒருவர் குதம்பைச்சித்தர். இங்கு கிழக்கு நோக்கிய கோயில் பாண்டவை ஆற்றின் கரையில் உள்ளது. இறைவன்- பஞ்சநதீஸ்வரர் இறைவி – தர்மசம்வர்த்தினி இறைவன் பெரிய லிங்க மூர்த்தியாக உள்ளார், அவரின் முன்னம்ஒரு நந்தி உள்ளது. அம்பிகை தெற்கு நோக்கி உள்ளார். வெளியில் கோஷ்ட மூர்த்திகள் ஏதுமில்லை, சண்டேசரும் இல்லை. உள் மண்டபத்தில் உள்ளதா என அறியமுடியவில்லை. வடகிழக்கில் கிணறு உள்ளது. இக்கோவில் குடும்ப வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளை நிவர்த்தி செய்யும் தலமாக சிறப்பு பெற்றுள்ளது.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”









காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
எருக்காட்டூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி