கீழப்பாவூர் திருவாலீஸ்வரர் திருக்கோயில், தென்காசி

முகவரி :
கீழப்பாவூர் திருவாலீஸ்வரர் திருக்கோயில்,
கீழப்பாவூர்,
தென்காசி மாவட்டம் – 627806
இறைவன்:
திருவாலீஸ்வரர்
இறைவி:
சிவகாமி அம்பாள்
அறிமுகம்:
செல்லுமிடமெல்லாம் சிவவழிபாடு செய்யும் வாலி, தென்பாண்டி நாட்டில் சிவ பூஜை செய்து வழிபட்ட தலங்களுள் ஒன்று தென்காசி மாவட்டத்திலுள்ள கீழப்பாவூர். சோழர் காலத்தில் இவ்வூர் சத்திரிய சிகாமணி நல்லூர், சதுரமங்கலம் குருமலை நாடு என்ற பெயர்களாலும் அளிக்கப்பட்டுள்ளதாக செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. இங்கு நந்தவனம் போல் உள்ள அழகிய இடத்தின் சிவகாமி அம்பாள் சமேத திருவாலீஸ்வரர் திருக்கோயில் அமையப்பெற்றுள்ளது.
தென்காசியில் இருந்து 13 கிலோ மீட்டரில் கீழப்பாவூர் உள்ளது. இங்கு உள்ள வடக்கு பேருந்து நிலையத்திலிருந்து சுரண்டை செல்லும் வழியில் நடந்து செல்லும் தொலைவில் ஆலயம் உள்ளது. ஆட்டோ வசதியும் உண்டு.
புராண முக்கியத்துவம் :
சுமார் 1300 வருட பழமையான இந்த ஆலயத்தில் ஏராளமான கல் தூண்கள் காணப்படுகின்றன சுற்றுச்சூழல் முழுவதும் கோயிலை பற்றிய விவரங்கள் முற்கால தமிழ் எழுத்து வடிவத்தில் கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளது. மாறவர்மன் ஸ்ரீவல்லபன் சடையவர்மன் குலசேகர பாண்டியன் என பல மன்னர்கள் இக்கோயிலுக்கு நிலங்கள் வழங்கியுள்ளனர் மன்னர்கள் காலத்தில் ராணுவ தலைமை இடமாக விளங்கிய இவ்வூரில் ராணுவ தளவாடங்கள் மற்றும் செப்பு நாணயங்கள் தயாரிக்கப்பட்டதாகவும் வரலாறு சொல்கிறது.
ஒருசமயம் இப்பகுதி வழியாக வாலி ஆகாய மார்க்கமாகச் சென்று கொண்டு இருந்தபோது உச்சிக்கால பூஜை செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது. எனவே இங்கு இறங்கி சிவலிங்கம் அமைத்து வழிபட்டு பலாச்சுளைகளை தேனையும் கலந்து நைவேத்தியம் செய்துள்ளார். இதற்கு ஆதாரமாக அம்பாள் சன்னதியில் வாலி சிவபூஜை செய்யும் காட்சி புடைப்பு சிற்பமாக உள்ளதை காணலாம். வாலி ஆராதித்தால் இங்கே எழுந்தருளியுள்ள இறைவன் திருவாலீஸ்வரர் என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். கோயிலின் மணிமண்டபத்தில் பிரதோஷ நந்தி வீற்றிருக்கிறார். அவருக்கு அருகிலேயே நவகிரகங்கள் உள்ளன. மணி மண்டப வாசலில் இடது பக்கம் ஒரு துவாரபாலகர் மட்டும் உள்ளார்.
நம்பிக்கைகள்:
அம்பாள் கல்யாண கோலத்தில் காட்சி தருவதால் திருமண தடை நீக்கும் தலமாகும் எதிரிகள் பயணம் காரிய தடைகள் விலகும் தலமாகவும் இது விளங்குகிறது.
சிறப்பு அம்சங்கள்:
மகா மண்டபத்தில் மங்கல விநாயகர், இடது பக்கம் பாலசுப்பிரமணியசுவாமி வலது பக்கம் விநாயகர் எதிரே அதிகார நந்தி சூரியபகவான் பாலசுப்பிரமணியசுவாமி சந்திர பகவானும் சனி பகவானும் இருக்கிறார்கள் இது ஒரு அபூர்வம் என்றே கருதமுடிகிறது. கருவறையில் திருவாலீஸ்வரர் சிறிய லிங்கத் திருமேனியுடன் அருள்பாலிக்கிறார். மூர்த்தி சிறிது என்றாலும் கீர்த்தி பெரிது அவருக்கு வலது பாகத்தில் தனி சந்நிதிகள் சிவகாமி அம்பாள் திருமணக் கோலத்தில் எழுந்தருளியுள்ளார். இயற்கை எழில் சூழ வெளிப்பிரகாரத்தில் கன்னி மூலையில் விநாயகர் வாயு மூலையில் பாலமுருகன் கோஷ்ட தெய்வமாக தட்சிணாமூர்த்தி, விஷ்ணு துர்க்கை, சண்டிகேஸ்வரர், நுழைவாயில் அருகில் பைரவர் தரிசனம் தருகிறார்கள்.
திருவிழாக்கள்:
பிரதோஷம் தேய்பிறை அஷ்டமி ஆனி உத்திரம் நவராத்திரி ஐப்பசி பௌர்ணமியில் அன்னாபிஷேகம் திருக்கல்யாண வைபவம் மார்கழி திருவாதிரை மகா சிவராத்திரி உள்ளிட்ட நாட்களில் விசேஷ அபிஷேக அர்ச்சனை ஆராதனை நடத்தப்படுகிறது.



காலம்
1300 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கீழப்பாவூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
தென்காசி
அருகிலுள்ள விமான நிலையம்
தூத்துக்குடி