காட்டுமயிலூர்கரம்தோன்றீஸ்வரர் சிவன்கோயில்,கடலூர்

முகவரி :
காட்டுமயிலூர் கரம் தோன்றீஸ்வரர் சிவன்கோயில்,
காட்டுமயிலூர், வேப்பூர் வட்டம்,
கடலூர் மாவட்டம் – 606302.
இறைவன்:
கரம்தோன்றீஸ்வரர்
இறைவி:
திரிபுரசுந்தரி
அறிமுகம்:
காட்டுமயிலூர் பெயருக்கேற்ப அரசின் காப்புக்காடுகள் சூழ அமைந்துள்ளது இந்த ஊர். மயில்கள் மான்கள் என வன விலங்குகள் சூழ இறைவன் ஏகாந்தமாய் உள்ளார். ஊருக்கு சற்றும் பொருந்தாத வகையில் இரண்டு ஏக்கர் பரப்பில் அமைத்துள்ளது கோயில் வளாகம். வளாகத்தின் நடுவில் எம்பெருமான் கிழக்கு நோக்கியும் அவர்க்கு இடப்பாகத்தில் கிழக்கு நோக்கி தனி கோயிலில் அமர்ந்திருக்கிறார் இறைவி திரிபுரசுந்தரி வளாகத்தின் வெளியில் நந்தி மண்டபம் ஒன்றுள்ளது.
உள்ளே நுழைந்தவுடன் இடதுபுறத்தில் மிக பழமையான (நூறு வயசுக்குக்கு மேல இருக்கும்)வன்னி மரம் ஒன்றுள்ளது அதனடியில் இரு விநாயகர்கள் நாகர்கள் பார்வதியை மகளாக பரதமா முனிவர் தவமிருக்க பார்வதியும் மகளாக பிறந்து வளர்ந்து வருகிறார், பருவமெய்திய பின் அம்பிகை ஆற்று மணலில் லிங்கம் செய்து பூசிக்கிறார் அப்போது ஓர் நாள் லிங்கத்தில் இருந்து கரம் ஒன்று வெளிப்பட்டு அம்பிகையை கரம் பிடிக்கிறார் இறைவன், இதனால் இறைவனுக்கு கரம் தோன்றீஸ்வரர் என பெயர்.
இறைவன் கருவறை சோழர்கால பாணியில் பிரஸ்தரம் வரை கருங்கல்லும், அதன் மேல் விமானம் செங்கல் கொண்டும் அமைக்கப்பட்டுள்ளது. இறைவனின் வடபுற கோட்டத்தில் மகாவிஷ்ணு சண்டேசருக்கு சற்று முன்னால் உள்ளார். இதற்க்கான காரணம் எண்ண என அறியமுடியவில்லை. பிரகாரத்தில் செல்வவிநாயகர், அண்ணாமலையார்,அவருக்கு முன்னால் ஒரு நந்தி உள்ளது. அடுத்து பெருமாள், முருகன் சன்னதிகள் உள்ளன. இறைவியும் கிழக்கு நோக்கியவர் அவருக்கு வடபுறம் கோட்டத்தில் அல்லாமல் தனித்த துர்க்கை வடக்கு நோக்கி உள்ளார். வடகிழக்கில் பைரவர் சூரிய சந்திரன் உள்ளனர்.












காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பாண்டிச்சேரி
அருகிலுள்ள இரயில் நிலையம்
கடலூர்
அருகிலுள்ள விமான நிலையம்
காட்டுமயிலூர்