Thursday Dec 26, 2024

காங்கேய நகரம் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி

காங்கேய நகரம் சிவன்கோயில் காங்கேய நகரம், குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம்

இறைவன்

இறைவன்: சிவன்

அறிமுகம்

சோழர் வரலாற்றில் விக்கிரம சோழன் காலந்தொட்டு காங்கேயர் என்ற பட்டம் புனைந்த குறுநில அரச மரபினரின் செல்வாக்கு தொடர்ந்து நிலைபெற்றது. இராஜேந்திர சோழ காங்கேயராயன், விக்கிரம சோழனின் ஆட்சியாளனாய் திருக்காளத்திப் பகுதியை ஆட்சி செய்தவனாவான். காங்கேயன் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவன். புலவர் ஒட்டக்கூத்தரைப் பேணியவன். இரண்டாம் குலோத்துங்கன் ஆட்சிக்கு உட்பட்டு ஆண்டுவந்த சிற்றரசன். இவனது தலைநகர் காஞ்சிபுரம். போர் மறவர்களாக விளங்கிய செங்குந்தர் மரபினன். சிலம்பாற்றின் கிழக்கு கரையில் தனது பெயரில் ஓர் நகரம் அமைத்து மக்களை குடியேற்றினான், இதுவே தற்போதைய காங்கேய நகரம். இன்று மிக சிறிய கிராமமாக ஓர் வைணவ ஆலயமும், ஓர் சிதைந்து காணாமல் போன ஓர் சிவாலயத்தின் மூன்று லிங்கங்களும் மட்டுமே பெரிய குளத்தின் கரையில் அரச மரத்தின் கீழ் மூன்று லிங்கங்கள் சிறிய மேடை கட்டி வைக்கப்பட்டுள்ளன. தற்காலிக கொட்டகை ஒன்று போடப்பட்டுள்ளது. கிராம மக்கள் இவற்றிற்கு ஓர் சிறிய கோயில் எழுப்ப கொடையாளரை எதிர்பார்க்கின்றனர். # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

காங்கேய நகரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவாருர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top