ஓகலூர் அமிர்தகடேஸ்வரர் சிவன்கோயில், பெரம்பலூர்

முகவரி :
ஓகலூர் அமிர்தகடேஸ்வரர் சிவன்கோயில்,
ஓகலூர், குன்னம் வட்டம்,
பெரம்பலூர் மாவட்டம் – 62108.
இறைவன்:
அமிர்தகடேஸ்வரர்
இறைவி:
வேதவல்லி
அறிமுகம்:
கருவேப்பிலங்குறிச்சி – ராமநத்தம் சாலையில் திட்டக்குடி வந்து வெள்ளாற்றை கடந்தாள் அகரம்சீகூர் இங்கிருந்து நான்கு கிமி தூரம் மேற்கில் சென்றால் ஒகளூர் அடையலாம். இங்கு ஊரின் முகப்பிலேயே சிவன்கோயில் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய கோயில் தென்புறம் வாயில் அமைந்துள்ளது, முகப்பு வாயில் ரிஷபத்தின் மேல் இறைவன் அமர்ந்திருக்கும் காட்சி சுதையாக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் இறைவன் அமிர்தகடேஸ்வரர் கிழக்கு நோக்கியும், இறைவி வேதவல்லி தெற்கு நோக்கியும், உள்ளனர்.
கருவறை முன்னால் இடைநாழி, அர்த்த மண்டபம் என உள்ளது எதிரில் உயர்ந்த கொடிமரம் உள்ளது, அதன் முன்னர் ஒரு நந்தி மண்டபமும் உள்ளது. கருவறை கோட்டத்தில் விநாயகர், லிங்கோத்பவர், பிரம்மன், துர்க்கை,உள்ளனர், தென்முகன் முன்னிழுக்கப்பட்ட ஒரு மண்டப முகப்புடன் உள்ளார். பிரகாரத்தில் மேற்கில் நீண்ட திருமாளிகைபத்தி உள்ளது அதில் விநாயகர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி மற்றும் வள்ளி தெய்வானை சமேத முருகன் சன்னதிகள் உள்ளன. அருகில் மகாலட்சுமி தனி கோயில் கொண்டுள்ளார். சண்டிகேஸ்வரர் பைரவர் சந்திரன் உபசன்னதிகளும் உள்ளன. இறைவியின் சன்னதி கிழக்கில் மகேஸ்வரி தனி மாடத்தில் உள்ளார். துர்க்கை சிலை ஒன்று சற்று பின்னமானதால் தனித்து வைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒருகாலபூஜையில் கோயில் பணிகள் நடைபெற்று வருகிறது.















காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஓகலூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
அரியலூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி