ஆயிப்பேட்டை ராம பக்த ஆஞ்சநேயர் திருக்கோயில், கடலூர்

முகவரி
ஆயிப்பேட்டை ராம பக்த ஆஞ்சநேயர் திருக்கோயில், ஆயிப்பேட்டை, கடலூர் மாவட்டம் – 608201.
இறைவன்
இறைவன்: ராம பக்த ஆஞ்சநேயர்
அறிமுகம்
ராம பக்த ஆஞ்சநேயர் என்ற திருநாமத்தில் கோயில் கொண்ட தலம் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள ஆயிப்பேட்டை. கீரப்பாளையம் சாலையில் 7கி.மீ தொலைவில் இக்கோவில் உள்ளது. இவரிடம் வைத்திடும் வேண்டுதல்கள் அனைத்தும் விரைவில் நிறைவேறுகிறதாம். குறிப்பாக திருமணத்தடை உள்ளவர்கள் இந்த அனுமனை வேண்டினால் அவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறுகிறது. திருமணம் முடிந்த அன்றே வடைமாலை சாற்றி நன்றி தெரிவிக்கின்றார்கள்.
புராண முக்கியத்துவம்
ஒருநாள் சாலையில் ஏதோ ஒரு வாகனத்தில் அடிபட்டு வானரம் ஒன்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது இதை பலரும் வேடிக்கை பார்த்து சென்றார்களே தவிர காப்பாற்ற ஒருவரும் முயலவில்லை. இந்நிலையில் அப்பகுதி வழியாக சென்ற மாணவன் ஒருவன் வானரம் அடிபட்டு கிடப்பதை பார்த்து ராம நாமத்தை உச்சரித்தபடி அதைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டான் ஆனால் அவன் முயற்சி பலனளிக்காமல் சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டது. தேம்பித் தேம்பி அழுத சிறுவன் சாலையின் அருகில் இருந்த காலி மனையில் கையாலயே பள்ளத்தை தோண்டி வானரத்தை நல்லடக்கம் செய்துவிட்டு அதன் அடையாளமாக மணலை கோபுர வடிவில் வைத்துவிட்டு சென்றான். அடுத்த நாள் முதல் தினமும் பள்ளி செல்லும் முன் பூக்களை பறித்து சென்று வானரத்தை அடக்கம் செய்யப்பட்ட பகுதியில் பூவை வைத்து வணங்கி விட்டுச் செல்வது வழக்கமாக கொண்டான். சில நாட்களுக்குப் பிறகு அந்த இடத்தில் ஆஞ்சநேயர் படம் ஒன்றையும் அதன் பிறகு அனுமன் பொம்மை வைத்து வழிபாடு செய்து வந்தான். அந்த இடத்தில் அனுமனின் அருள் பரிபூரணமாக இருப்பதை உணர்ந்து கொண்டு அங்கே ஒரு கோயில் கட்ட வேண்டும் என்ற விருப்பத்தை அச்சிறுவன் பெற்றோரிடம் கூறினார் அதற்கு அவர்கள் ஏழ்மையான நம்மால் அது முடியாத காரியம் எனவே அதை விட்டுவிட்டு படிப்பில் கவனம் செலுத்து என்று கூறிவிட்டனர் வருத்தமாக புதைக்கப்பட்ட இடத்தில் தினமும் வழிபாடு செய்து வந்தான். அந்த நிலத்தின் சொந்தக்காரரான பெண்மனியை ஒரு நாள் சந்தித்து அந்த இடத்தில் கோயில் கட்ட விருப்பத்தைத் தெரிவித்தான் அப்பெண்மணி அவனின் பக்தியை உணர்ந்து கோயில் கட்ட இடத்தை எடுத்துக் கொள் எனவும் கோயிலுக்கு எழுதிதரதாகவும் கூறியுள்ளார். சிறுவன் அதைத் தொடர்ந்து சுற்றுவட்டாரம் எல்லாம் மக்களிடையே சென்று கோயில் கட்ட நிதி உதவி கேட்டான். பலரும் கைவிரித்து விட இறுதியாக ஒரு சிலரது உதவியோடு சிறிய அனுமன் சிலை செய்து கீற்றுக் கொட்டகையின் கீழ் சிறிய ஆலயம் அமைத்தான். அதன் பின்னர் அங்கு வந்து வணங்கி வாழ்வு மேன்மை அடைந்தனர். எனவே கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து அதை அடுத்து கட்டடமாக கட்டப்பட்டு தற்சமயம் கடலூர் மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த ஆலயமாக விளங்கி வருகிறது.
நம்பிக்கைகள்
இவரிடம் வைத்திடும் வேண்டுதல்கள் அனைத்தும் விரைவில் நிறைவேறுகிறதாம். குறிப்பாக திருமணத்தடை உள்ளவர்கள் இந்த அனுமனை வேண்டினால் அவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறுகிறது. திருமணம் முடிந்த அன்றே வடைமாலை சாற்றி நன்றி தெரிவிக்கின்றார்கள். இவரிடம் குழந்தை பாக்கியம் வேண்டுவோர் அனுமனுக்கு துளசி மாலை அணிவித்து வேண்டுகிறார்கள். குழந்தைப்பேறு கிடைத்தவுடன் குழந்தையுடன் கோயிலுக்கு வந்து வாழை பழ மாலை அணிவித்து தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுகிறார்கள். கெட்ட கனவுகளால் பாதிக்கப்பட்டவர்கள் மன நிம்மதி இழந்தவர்கள் சிறு சிறு காகிதத்தில் ஸ்ரீராமஜெயம் எழுதி அதை மாலை தொடுத்து அனுமனுக்கு சாத்தி வழிபாடு செய்தால் பலன் கிடைக்கும். முதன் முதலாக பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் நேர்முகத்தேர்வுக்கு செல்வோர் அனுமனை வணங்கி செல்கின்றனர் அதனால் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதாக நேர்முகத்தேர்வுக்கு செல்வோருக்கு விரும்பிய வேலை கிடைப்பதாகவும் கூறுகிறார்கள் நல்ல வேலை கிடைத்தவுடன் முதல் மாத சம்பளத்தில் திருமஞ்சனம் செய்து நன்றி கடன் செலுத்துகிறார்கள். ஆரோக்கியம் குறைபாடு உள்ளவர்கள் அனுமனை வணங்கி பிரசாதத்தை உட்கொண்டு ஆரஞ்சு நிற கயிற்றை கையில் கட்டிக் கொண்டால் விரைவில் நலம் கிடைப்பதாகச் சொல்கிறார்கள். பக்தர்களுக்கு பிரசாதமாக சென்ந்தூரம் வழங்கப்படுகிறது.
சிறப்பு அம்சங்கள்
ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும் மகாமண்டபம் அதன் வலப்பக்கம் நரசிம்மரும் இடப்பக்கமும் ஆதி அனுமனும் உள்ளனர். அர்த்தமண்டபத்தில் ராமர், லட்சுமணர், சீதை, நவகிரகம் கருடாழ்வார், சாய்பாபா ஆகியோர் காட்சி தருகிறார்கள். கருவறையின் மேலே முப்பத்தி ஏழு அடி உயரத்தில் கம்பீரமாக விஸ்வரூப ஆஞ்சநேயர் தரிசனம் தர கருவறை தெற்கு நோக்கி இரு கரங்கள் கூப்பி சாந்தமான கோலத்தில் ராமபக்த ஆஞ்சநேயர் காட்சி தருகிறார்
திருவிழாக்கள்
ஆண்டு திருவிழாவாக அனுமன் ஜெயந்தி வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது அனுமன் ஜெயந்தி அன்று காலையில் வெள்ளாற்றின் கரையில் இருந்து 1008 பால்குடம் வீதி உலாவாக புறப்பட்டு கோயிலை வந்தடையும் மதியம் சிவப்பு மகா அபிஷேகம் வெண்ணை காப்பு அலங்காரமும் செய்யப்படும் சனிக்கிழமைகளில் சிறப்பு திருமஞ்சனம் முடிந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சி தருகிறார்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஆயிப்பேட்டை
அருகிலுள்ள இரயில் நிலையம்
கடலூர்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி