அமர்நாத் குடைவரை திருக்கோயில்

முகவரி
அமர்நாத் குடைவரை திருக்கோயில், பெல்டால் அமர்னாத், பஹல்கம், ஜம்மு காஷ்மீர் – 192230.
இறைவன்
சக்தி: சம்புநாதேஸ்வரி பைரவர் : திரிசந்தேஷ்வரர், உடல் பகுதி அல்லது ஆபரணம்:
அறிமுகம்
அமர்நாத் குடைவரைகள் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய இந்துக் குடைவரை கோயில் ஆகும். இக்கோயில் சுமார் 5000 ஆண்டுகள் பழைமையானதாக இந்து புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மே முதல் ஆகஸ்ட் மாதம் வரை உருவாகும். அதன் பின்னர் இந்த பனி லிங்கம் உருகி, மீண்டும் உருவாகிறது. இது லிங்கமானது சந்திரனின் வளர் மற்றும் தேயும் காலங்களுக்கு ஏற்ப உருவாவதாக கூறப்படுகிறது. பார்வதிக்கு வாழ்வின் ரகசியத்தை சிவ பெருமான் கூறும் புராண கதையாகவும் உள்ளது. இங்கு பனிலிங்கம் மற்றும் பிள்ளையார் பனி சிலைகளும் இங்கு உள்ளன. இந்த இடம் 51 சக்தி பீடங்களில் தேவியின் தொண்டைப் பகுதி விழுந்த இடமாக கூறப்படுகிறது. இக்குகை 3,888 மீட்டர் உயரத்திலும், ஸ்ரீநகரில் இருந்து கிட்டத்தட்ட 141 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது.
புராண முக்கியத்துவம்
தந்தையாகிய தட்சனால் அவமதிக்கப்பட்ட தாட்சாயிணி அந்த யாகம் அழியுமாறு சபித்து விட்டு, தட்சன் தந்த உடல் தனக்கு வேண்டாமென தட்சன் நடத்திய யாகத்தின் தீயிலேயே எரிந்து போகிறாள். சிவனால் படைக்கப்பட்ட வீரபத்திரர் அந்த யாகத்தை அழித்தார். மனைவி இறந்த வருத்தத்தில், சிவன் தன் மனைவி தாட்சாயிணியின் இறந்த உடலை எடுத்துக் கொண்டு ஊழித்தாண்டவம் ஆடினார். சிவனின் ஆட்டத்தை நிறுத்த விஷ்ணு தன் சக்ராயுதத்தால் தாட்சாயிணியின் உடலை 51 துண்டுகளாக வெட்டி வீழ்த்தினார். பிறகு சிவன் சாந்தமானார். சிதறிய தாட்சாயிணியின் உடல் பகுதிகள் விழுந்த 51 இடங்கள் சக்தி பீடங்களாயின. பிறகு தாட்சாயிணி பர்வதராஜன் மகள் பார்வதியாகப் பிறந்து ஈசனை மணந்தாள்.
திருவிழாக்கள்
மகா சிவராத்திரி
காலம்
1000 to 2000
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பஹல்கம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
ஸ்ரீநகர்
அருகிலுள்ள விமான நிலையம்
ஸ்ரீநகர்