Friday Sep 20, 2024

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில், கன்னியாகுமரி

முகவரி : கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில், கொல்லங்கோடு, கன்னியாகுமரி மாவட்டம் – 629160. இறைவி: பத்ரகாளி அறிமுகம்: குமரி மாவட்டத்தில் உள்ள இன்னொரு பிரசித்திப் பெற்ற கோவில்களில் கொல்லங்கோடு தூக்க முடிப்புரை கோவிலும் ஒன்று. இந்த பத்ரகாளி அம்மன் கோவிலில் இரண்டு தேவிகள் ஒருசேர அமர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குகின்றனர். இதனால் இங்கு தேவிகள் வசிக்க இரண்டு கோவில்கள் உள்ளது. ஒன்று வெங்கஞ்சி திருவிழா கோவில். மற்றொன்று திருவிழா நாட்களை தவிர மீதமுள்ள அனைத்து நாட்களிலும் […]

Share....

காரப்பாக்கம் கங்கையம்மன் திருக்கோயில், சென்னை

முகவரி : காரப்பாக்கம் கங்கையம்மன் திருக்கோயில், பழைய மகாபலிபுரம் சாலை, காரப்பாக்கம், சென்னை – 97. இறைவி: கங்கையம்மன் அறிமுகம்: சென்னையை அடுத்த காரப்பாக்கம், பெரிய பெரிய ஐ.டி., நிறுவனங்கள் சூழ்ந்த பகுதியாகும். முன்னொருகாலத்தில், இப்பகுதி விவசாயம் செய்யும் செழிப்பான பகுதி. பல ஊர்களுக்கு அன்னமிட்ட பகுதி. ஏராளமான விவசாயிகள் வாழ்ந்த பகுதி. அன்று அவர்களுக்கு அருளவே “கங்கை அம்மன்’’ இங்கு (காரப்பாக்கம்) கோயில் கொண்டாள். புராண முக்கியத்துவம் :  கபில முனிவர், இறைவனை வேண்டி கடும் […]

Share....

வாழப்பட்டம்பாளையம் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில், புதுச்சேரி

முகவரி : வாழப்பட்டம்பாளையம் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில், புதுச்சேரி செதரபாடு மெயின் ரோடு, ஐஸ்வர்யா நகர், பெரம்பை, வாழப்பட்டம்பாளையம், புதுச்சேரி,  தமிழ்நாடு 605502 இறைவன்: கல்யாண சுந்தரேஸ்வரர் இறைவி: கோகிலாம்பிகை அறிமுகம்:  கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் இந்தியாவின் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வில்லியனூர் கொம்யூனில் உள்ள ஒசுடு ஏரிக்கு அருகில் வாழப்பட்டம்பாளையத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மூலஸ்தானம் கல்யாண சுந்தரேஸ்வரர் என்றும் அன்னை கோகிலாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது. […]

Share....

கீழூர் கைலாசநாதர் கோவில், புதுச்சேரி

முகவரி : கீழூர் கைலாசநாதர் கோவில், புதுச்சேரி மெயின் ரோடு, கீழூர், வில்லியனூர், புதுச்சேரி 605110  இறைவன்: கைலாசநாதர் இறைவி: காமாட்சி அறிமுகம்: புதுச்சேரி மாவட்டத்தில் வில்லியனூர் கொம்யூனில் உள்ள கீழூர் கிராமத்தில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கைலாசநாதர் கோயில் உள்ளது. மூலவர் கைலாசநாதர் என்றும், தாயார் காமாட்சி என்றும் அழைக்கப்படுகிறார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கீழூருக்கு முக்கிய இடம் உண்டு. பாண்டிச்சேரியில் இருந்து தவளக்குப்பம் வழியாக மதுகரை பேருந்துப் பாதையில் இக்கோயில் அமைந்துள்ளது. அருகிலுள்ள ரயில் நிலையம் […]

Share....

இடையர்பாளையம் ஜலகண்டேஸ்வரர் கோவில், புதுச்சேரி

முகவரி : இடையர்பாளையம் ஜலகண்டேஸ்வரர் கோவில், புதுச்சேரி இடையர்பாளையம், அரியாங்குப்பம் கொம்யூன், புதுச்சேரி 605007 இறைவன்: ஜலகண்டேஸ்வரர் இறைவி: அகிலாண்டேஸ்வரி அறிமுகம்: புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள அரியாங்குப்பம் கொம்யூனில் இடையர்பாளையத்தில் அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரர் கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மூலவர் ஜலகண்டேஸ்வரர் என்றும், அன்னை அகிலாண்டேஸ்வரி என்றும் அழைக்கப்படுகிறார். இடையர்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 350 மீட்டர் தொலைவில் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் புதுச்சேரியிலிருந்து கடலூர் வழித்தடத்தில் (NH 45A) அமைந்துள்ளது. பேருந்து நிலையத்திலிருந்து நடந்து செல்லக்கூடிய […]

Share....

முத்தாலங்குறிச்சி லட்சுமி நரசிம்மர் கோவில், தூத்துக்குடி

முகவரி : முத்தாலங்குறிச்சி லட்சுமி நரசிம்மர் கோவில், முத்தாலங்குறிச்சி, தூத்துக்குடி மாவட்டம் – 628619. இறைவன்: லட்சுமி நரசிம்மர் அறிமுகம்: தமிழகத்தில் லட்சுமி நரசிம்மர், ஒரு சில இடங்களில்தான் தனிச் சன்னிதியில் காணப்படுகிறார். அந்த வகையில் முத்தாலங்குறிச்சி லட்சுமி நரசிம்மர் முக்கியத்துவம் பெறுகிறார். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள முத்தாலங்குறிச்சி, தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள மிகவும் பழமையான ஊர். இவ்வூரில் உள்ள சிவாலயத்தில் அருளும் இறைவன், ‘வீரபாண்டிஸ்வரர்’ என்னும் ‘முகில்வண்ணநாதர்’ என அழைக்கப்படுகிறார். தாயார் சிவகாமி […]

Share....

காளி திருகாமேசுவரர் கோயில், நாகப்பட்டினம்

முகவரி : காளி திருகாமேசுவரர் கோயில், காளி, மயிலாடுதுறை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 609811. இறைவன்: திருகாமேசுவரர் இறைவி: அபிராமி, பாலசுகாம்பாள் அறிமுகம்: ஊரைக் காத்த காளியின் பெயரால் அழைக்கப்படும் தலம், பெண்களின் மாதவிலக்கு குறை நீக்கும் திருக்கோவில், அபிராமி, பாலசுகாம்பாள் என இரண்டு அம்மன்கள் குடிகொண்ட சிறப்புமிக்க தலம் என பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டு விளங்குகிறது, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள காளி என்னும் திருத்தலம். இந்தக் கோவில் சோழமன்னன் ராஜராஜதேவன் எனும் இரண்டாம் ராஜராஜ […]

Share....

மத்தூர் மகிஷாசுரமர்த்தினி கோயில், திருவள்ளூர்

முகவரி : மத்தூர் மகிஷாசுரமர்த்தினி கோயில், மத்தூர், திருவள்ளூர் மாவட்டம் – 631206. இறைவி: மகிஷாசுரமர்த்தினி அறிமுகம்: இந்த மகிஷாசுரமர்த்தியின் ஆலயம் திருத்தணியில் இருந்து திருப்பதி போகும் மார்க்கத்தில் 7 கி.மீட்டரிலும், பொன்பாடி ரெயில் நிலையத்திற்கு மேற்கே இரண்டு கி.மீட்டரிலும் இருக்கிறது. இந்த அம்மன் மத்தூர் என்ற ஊரில்தான் உள்ளது. புராண முக்கியத்துவம் : அன்று யுகாந்த காலத்தில் மகிஷாசுரன் பிரம்ம தேவனிடம் ஏராளமான வரத்தைப் பெற்றுத் தேவர்களைத் துன்புறத்தி வந்தான். தான் எவராலும் கொல்லப்படக்கூடாது. ஆனால் […]

Share....

சமபந்தர் மேடு

முகவரி : சமபந்தர் மேடு வெள்ளாம்பெரம்பூர், தஞ்சாவூர் மாவட்டம் – 613101. இறைவன்: சம்பந்தர், அப்பர் அறிமுகம்: கண்டியூர் திருக்காட்டுப்பள்ளி நெடுஞ்சாலையில் திருப்பூந்துருத்தி, திருவாலம்பொழில் ஆகிய கடந்தால் மேற்கே மேட்டுசாலை நிற்த்தம் என்ற இடம் வரும். அங்கிருந்து வெள்ளாம்பெரம்பூரில் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் சம்பந்தர் மேடு அமைந்துள்ளது. அங்கு சம்பந்தப் பெருமானுக்கும் அப்பருக்கும் என ஒரு கோயில் உள்ளது. பழைய கோயில் சிதிலமுற்றதால் தற்போது அழகிய கற்றளியாக அக்கோயிலை புதுப்பித்துள்ளனர். புராண முக்கியத்துவம் :  திருநாவுக்கரசர் என்னும் […]

Share....

ஐவநல்லூர் ருத்ரபுரீஸ்வரர் சிவன் கோயில், நாகப்பட்டினம்

முகவரி : ஐவநல்லூர் ருத்ரபுரீஸ்வரர் சிவன் கோயில் ஐவநல்லூர், நாகை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 611106. இறைவன்: ருத்ரபுரீஸ்வரர் இறைவி: முத்தாம்பரநாயகி அறிமுகம்: நாகப்பட்டினத்தில் இருந்து சிக்கல் செல்லும் சாலையில் இரண்டுகிமீ தூரத்தில் வலதுபுறம் உள்ளது இந்த ஐவநல்லூர். இந்த ஐவநல்லூர் ஒட்டி இரு பெரும் சாலைகள் சேருமிடம் புத்தூர் நாலுரோடு எனப்படுகிறது. ஐவர் எனப்படும் பஞ்சபாண்டவர் வழிபட்ட தலம் ஆதலால் ஐவர் நல்லூர் எனப்படுகிறது, சிறிய தெருவில் கிழக்கு நோக்கிய கோயிலாக உள்ளது இந்த […]

Share....
Back to Top