அக்கரைவட்டம் சோமநாதர் சிவன்கோயில், காரைக்கால்

முகவரி :
அக்கரைவட்டம் சோமநாதர் சிவன்கோயில்,
அக்கரைவட்டம், நிரவி கொம்யூன்,
காரைக்கால் மாவட்டம் – 609602.
இறைவன்:
சோமநாதர்
இறைவி:
சௌந்தரவள்ளி
அறிமுகம்:
காரைக்காலில் இருந்து நாகூர் செல்லும் சாலையில் உள்ள அரசலாற்று பாலத்தை தாண்டி இரண்டு கிமீ தூரம் சென்றவுடன் இடதுபுறம் திரும்பும் சிறிய சாலையில் அக்கரைவட்டம் அமைந்துள்ளது. காரைக்காலின் அடுத்த கரையில் உள்ள பகுதி என்தால் அக்கரைவட்டம் என அழைக்கப்பட்டது. இங்குள்ள பெரியகுளத்தின் கிழக்கு கரையில் உள்ளது சிவன்கோயில். திருமலைராயன் மன்னன் கட்டிய 108 கோயில்களில் இக்கோயிலும் ஒன்று.
மேற்கு நோக்கி அமைதுள்ளது இக்கோயில், திருமலைராயன் பிற ஊர்களில் இருக்கும் பிரசித்தி பெற்ற சிவாலயங்கள் பெயரிலேயே தனது பட்டினத்திலும் கோயில்கள் அமைத்துள்ளார். அவ்வகையில் சோமநாதர் கோயிலின் மறு கோயிலாக இவ்வூரில் சோமநாதர் கோயில் ஒன்றை கட்டினார். இங்குள்ள இறைவன் சோமநாதர் இறைவி சௌந்தரவள்ளி என்பதாக உள்ளது. சித்தானந்த சுவாமிகள் என்பவர் 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த சித்தராவார். இவர் காரைக்கால் மாவட்டம் அக்கரைவட்டம் கிராமத்தில் உள்ள சௌந்தரியவல்லி உடனுறை சோமநாதர் கோயில் சமாதியடைந்தார், எனவே தற்போது அங்கு சமாதிக் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இக்கோயில் இருநூறு ஆண்டுகளுக்கு மேல் இங்குள்ளது என அறியலாம்.
கோயில் பழம்பெருமைகளின்றி இன்று எளிமையாக உள்ளது. இறைவன் சோமநாதர் சற்று பெரிய அளவிலான லிங்கமூர்த்தியாக காட்சியளிக்கிறார். இறைவி சௌந்தரவள்ளி தெற்கு நோக்கி உள்ளார் இறைவன் முன்னம் உள்ள முகப்பு மண்டபத்தின் வாயிலில் விநாயகரும், முருகனும் தனிதனி மாடங்களில் உள்ளனர். கருவறை கோட்டங்களில் இல்லாமல் வடக்கில் துர்க்கையும், தென்புறம் தக்ஷ்ணமூர்த்தியும் உள்ளனர். வடகிழக்கில் நவகிரகம் உள்ளது. சண்டேசர் வடக்கில் தனி சிற்றாலயம் கொண்டுள்ளனர்.









காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
அக்கரைவட்டம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
காரைக்கால்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி