’20 ஆயிரம் கோவில்களில்விளக்கேற்ற கூட வசதியில்லை’

சென்னை, ”தமிழகத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்களில் ஒரு வேளை கூட விளக்கு ஏற்றுவதற்கான சூழல் இல்லை,” என, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறினார். சென்னை, மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில் நீர் தெளிப்பான், சூரிய ஒளிசக்தி வாயிலாக தானாக இயங்கும் சோலார் விளக்கு திட்டத்தை, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நேற்று துவக்கி வைத்தார்.சோலார் விளக்குபின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், கோடை காலத்தை முன்னிட்டு, பக்தர்கள் வசதிக்காக, அறநிலையத்துறை சார்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் நடக்கும் இடங்களில் தென்னை நார் பாதை அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு மோர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த பானம் வழங்க அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.மயிலை கபாலீஸ்வரர் கோவிலில், வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்கள், வெயிலின் தாக்கம் அறியாதவகையில், நீர்த் தெளிப்பான் மற்றும் சோலார் விளக்குகள் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.அன்னை தமிழில் அர்ச்சனை திட்டத்தை அனைத்து கோவில்களிலும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சிதம்பரம் நடராஜர் கோவிலில், 2019ம் ஆண்டுக்கு முன்புவரை கனக சபை தரிசனம் முறையாக நடைபெறவில்லை. கொரோனா தொற்றுக்கு பின், கனகசபை
தரிசனம் முழுதும் நிறுத்தப்பட்டுள்ளது.கோரிக்கைதற்போது, அறநிலையத்துறை சார்பில், சிதம்பரம்
கோவிலில் கனகசபை தரிசனம் செய்ய, தீட்சதர்களுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ஒரு கால பூஜைத் திட்டத்தில் உள்ள 12 ஆயிரத்து, 959 கோவில்களோடு, 2,000 கோவில்கள் இணைக்கப்பட்டுள்ளது.
20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருக்கோவில்களில், ஒரு வேளை கூட விளக்கு ஏற்றுவதற்கான
சூழ்நிலை இல்லை.இவ்வாறு, அவர் கூறினார்.இந்நிகழ்வில், அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன்,
தொகுதி எம்.எல்.ஏ., வேலு, இணை கமிஷனர்கள் காவேரி, ரேணுகாதேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.