வேளாகுடி சிவன் கோயில், திருவாரூர்

முகவரி :
வேளாகுடி சிவன்கோயில்,
வேளாகுடி, வலங்கைமான் வட்டம்,
திருவாரூர் மாவட்டம்.
இறைவன்:
சிவன்
அறிமுகம்:
கும்பகோணம் – பட்டீஸ்வரம் – ஆவூர் – திருக்கருகாவூர் என ஒரு கிராம சாலை செல்கிறது, அதில் ஆவூர் தாண்டியதும் சரியாக 2வது கிமீ-ல் உள்ளது கல்விகுடி; இதன் வடக்கில் ஒரு கிமீ பயணித்தால் உள்ளது வேளாகுடி கிராமம்.
கிழக்கு மேற்கில் இரண்டு தெருக்கள், ஈசான்யமூலையில் ஒரு பெரிய குளம், அதன் கரையில் உள்ள தகவல்பலகை ஏரிவேளூர் ஊராட்சியை சேர்ந்த வேளாகுடி என இது என சொல்கிறது. அதன் கரையில் கிழக்கு நோக்கியதாக ஒரு ஐயனார் கோயில்உள்ளது, இக்கோயில் பழுதடைந்த நிலையில் உள்ளது, இதே கோயிலில் வெட்டவெளியில் ஒரு அழகிய லிங்கமும், அதன் எதிரில் ஒரு நந்தியும் உள்ளது. சற்றே சிதைவடைந்த ஒரு பைரவர் தனியாக வைக்கப்பட்டு உள்ளார். விநாயகர் மட்டும் சன்னதி உள்ளே இருக்கிறார், சண்டேசர்களும் வெயிலில் இருபுறமும் உள்ளனர்.
இவர் இருந்தது எங்கே? எப்படி ஐயனார் கோயில் வந்தார்? என பல கேள்விகள் ஆனால் பதில் மட்டும் இல்லை. ஆனால் நாம் செய்யவேண்டியது ஒன்றுண்டு, இறைவனுக்கு இவ்விடத்தை ஒட்டி கோயில் ஒன்று உருவாக்கவேண்டும், நித்ய பூஜைகளும் முறையாக நடைபெறவேண்டும்.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”






காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வேளாகுடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
கும்பகோணம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருவாரூர்