வீரபோகம் விஸ்வநாதர் சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி :
வீரபோகம் விஸ்வநாதர் சிவன்கோயில்,
வீரபோகம், நாகை வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 610101.
இறைவன்:
விஸ்வநாதர்
இறைவி:
விசாலாட்சி
அறிமுகம்:
திருவாரூர் – மயிலாடுதுறை சாலையில் எட்டாவது கிமீ-ல் வலப்பாறு ஓடுகிறது அதன் தென் கரையில் சென்றால் விற்குடி தாண்டி வீரபோகம் அடையலாம். இதற்க்கு நான்கு கிமீ தூரம் இருக்கும். போரில் வீரம் காட்டியதற்காக அவர்களுக்கு வரியிலா நிலங்கள் அளிக்கப்படுவதே வீரபோகம் ஆகும். இத்தகைய வீரபோக நிலங்கள் தமிழகத்தில் பரவலாக உள்ளன. நாகை வட்டத்தில் இங்கே உள்ளதை காணலாம். இந்த வீரபோகத்தில் சிறியதாக ஒரு சிவன் கோயில் உள்ளது. கிழக்கு நோக்கியது. இறைவன் விஸ்வநாதர் கிழக்கு நோக்கியும் இறைவி விசாலாட்சி தெற்கு நோக்கியும் உள்ளனர். இறைவன் எதிரில் சிறிய நந்தி உள்ளது. கருவறை கோட்டத்தில் தென்முகன், லிங்கோத்பவர் துர்க் உள்ளனர். சண்டேசரும் உள்ளார். பழைய கோயிலின் புதிய வடிவமாகவே தோன்றுகிறது.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”



காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வீரபோகம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி