Thursday Dec 05, 2024

வீடூர் ஸ்ரீ ஆதிநாதர் கோவில், விழுப்புரம்

முகவரி

வீடூர் ஸ்ரீ ஆதிநாதர் கோவில், வீடூர், விழுப்புரம், தமிழ்நாடு 605652

இறைவன்

இறைவன்: ஆதிநாதர்

அறிமுகம்

கி.பி. 10 ம் நூற்றாண்டில் உருவான இந்த சமணக்கோவில் திண்டிவனம் – விழுப்புரம் நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள வீடூர் அணைக்கு முன்று கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பலமுறை புதுப்பிக்கப்பட்டதால் அதன் தொன்மை பற்றிய விவரங்கள் அழிந்து காணப்படுகிறது. இந்த சமணக்கோவில் கருவறை, உள்ளாலை, சிகரம், அர்த்தமண்டபம், மகா மண்டபம், மனத்தூய்மைக் கம்பம், பலிபீடம், இராஜகோபுரம், அரணுடன் கூடிய திருச்சுற்று ஆகியன கொண்ட திராவிட பாரம்பரிய கட்டக்கலையுடன் விளங்குகிறது. சமீபத்தில் புணருதாரணம் செய்யப்பட்டதால் அழகிய வண்ணங்களுடன் காட்சி தருகிறது.

புராண முக்கியத்துவம்

வடகிழக்கில் பக்தாமர மண்டபம் ரிஷபதேவர், மானதுங்காச்சாரியார் உருவச்சிலைகளுடன் பக்தாமர ஸ்லோகங்களும், மற்றும் நவக்கிரக தீர்தீத்தங்கரர்கள் உருவச் சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. திருச்சுற்று வடபகுதியில் ஸ்ரீஸ்ரேயாம்சநாதர் மற்றும் பார்சுவநாதர் சிலைகள் அடங்கிய தனிக் கோவில் ஒன்றும் ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீபிரம்மதேவர், ஸ்ரீஜ்வாலாமாலினி, ஸ்ரீபத்மாவதி மற்றும் நவக்கரக சிலைகள் அடங்கிய சன்னதிகளும் எதிரில் ஸ்ரீக்ஷேத்ரபாலகர் சன்னதியும் அடங்கியுள்ளது. மூலவர் ஆதிநாதர் கருவறையில் அமர்ந்துள்ளார். தீர்தீத்தங்கரர்கள், உள்ளாலை வாயிலில் அழகிய கோமுக யக்ஷன், சக்ரேஸ்வரி யக்ஷி பளிங்கு கல் சிலை அமைக்கப்பட்டுள்ளது. யக்ஷ, யக்ஷி, நந்தீஸ்வர தீபம், மஹாமேரு போன்று பல உலோகச் சிலைகளும் மற்றும் கல்லால் அமைந்த 24 தீர்தீத்தங்கரர் சிலையும் கொண்டுள்ளது

திருவிழாக்கள்

இவ்வாலயம் தினமும் இருவேளை பூஜைகள்,விசேஷ தினங்களில் பிரத்யேக பூஜைகள் நடந்து வருகிறது. மற்றும் திருவிழாக்கள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றன. முப்பதுக்கும் மேற்பட்ட சமணஇல்லறத்தார்கள் வாழ்ந்து வருகின்றனர்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)

அருகிலுள்ள பேருந்து நிலையம்

வீடூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

விழுப்புரம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top