Thursday Sep 19, 2024

லக்குண்டி பசவேஸ்வரர் கோயில், கர்நாடகா

முகவரி :

லக்குண்டி பசவேஸ்வரர் கோயில், கர்நாடகா

பெயரிடப்படாத சாலை, லக்குண்டி,

கர்நாடகா – 582115

இறைவன்:

பசவேஸ்வரர்

அறிமுகம்:

                    கர்நாடகாவின் கடக் மாவட்டத்தில் உள்ள கடக் நகருக்கு அருகே லக்குண்டி கிராமத்தில் அமைந்துள்ள சிவபெருமானின் காளை வாகனமான நந்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட பசவேஸ்வரர் கோயில் உள்ளது. சாளுக்கியர்களின் கோவில்களில் காணப்படும் இந்த ஆலயம் வழக்கம் போல் கதவு சட்டத்தில் அலங்கரிக்கப்பட்ட சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய நடுத்தர அளவிலான கோவிலாகும். இந்த கோவில் கி.பி 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இது நானேஸ்வரர் கோயிலுக்கு மிக அருகில் உள்ளது. கோயிலுக்குள் பெரிய நந்தி உள்ளது.

ஹலுகொண்டா பசவேஸ்வரர் கோயில் லக்குண்டி சிவன் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. லக்குண்டியில் கட்டப்பட்ட 101 கோயில்களின் எஞ்சியிருக்கும் நினைவுச்சின்னங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த கோவிலை ஒட்டி ஒரு அழகான ஏரி உள்ளது. கோவில் முழுவதும் சேதமடைந்து புனரமைக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் இங்கு சிலைகளோ, பூஜைகளோ இல்லை. லக்குண்டி பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 1 கிமீ தொலைவில் கோயில் அமைந்துள்ளது.

காலம்

கி.பி 11 ஆம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

இந்தியத் தொல்லியல் ஆய்வகம்

அருகிலுள்ள பேருந்து நிலையம்

லக்குண்டி

அருகிலுள்ள இரயில் நிலையம்

கடக்

அருகிலுள்ள விமான நிலையம்

ஹுப்லி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top