ராமாபுரம் காசி விஸ்வநாதர் சிவன்கோயில், மயிலாடுதுறை

முகவரி :
ராமாபுரம் காசி விஸ்வநாதர் சிவன்கோயில்
ராமாபுரம், குத்தாலம் வட்டம்,
மயிலாடுதுறை மாவட்டம் – 609003.
இறைவன்:
காசி விஸ்வநாதர்
இறைவி:
காசி விசாலாட்சி
அறிமுகம்:
மயிலாடுதுறையின் மேற்கில் உள்ள ரயில் நிலையத்தை தாண்டியதும் உள்ளது சித்தர்காடு, இங்கிருந்து வடக்கே, உள்ள சோழம்பேட்டைக்கு செல்லும் சிறிய சாலையில் காவிரியை தாண்டியதும் உள்ளது ராமாபுரம். சோழம்பேட்டையின் உட்கிராமமாக உள்ளது இந்த ஊர். இந்த சிறிய சாலையிலேயே உள்ளது ஒரு சிவன் கோயிலும், பெருமாள் கோயிலும். ராமாபுரம் என்பதன் பெயர் காரணம் தெரியவில்லை.
சிவன்கோயில் சிறியது என்றோ பெரியது என்றோ சொல்ல இயலாத அளவில் உள்ளது. மேற்கு நோக்கியது. முகப்பு அலங்கார வளைவுடன் அழகாக அமைக்கப்பட்டுள்ளது நுழைவாயில். இறைவன்- காசி விஸ்வநாதர் இறைவி-காசி விசாலாட்சி. இறைவன் மேற்குநோக்கியும் இறைவி தெற்கு நோக்கியதுமாக கருவறை கொண்டுள்ளனர். இறைவனது கருவறை வாயிலில் விநாயகரும் முருகனும் உள்ளனர். கருவறை கோட்டங்களில் தென்முகன் மட்டுமே கல் திருமேனி மற்றவை சிமென்ட் சிலைகளாக வைத்து உள்ளனர். சண்டேசர் வடபுறம் உள்ளார் வடகிழக்கில் பைரவர் நவகிரகங்கள் உள்ளன. சிறிய நாகர் சிலை ஒன்றும் வடபுறம் உள்ளது. வழமையான சிற்றாலயங்கள் ஏதுமில்லை. வடமேற்கில் கிழக்கு நோக்கிய ஐயப்பன் சன்னதி கட்டப்பட்டு உள்ளது. கால மாற்றதில் உள்ளே வந்துள்ளார் ஐயப்பன் என்றே தோன்றுகிறது. காலையில் குறித்த நேரத்துக்கு திறப்பதாக தெரியவில்லை. மாலை நேரத்தில் மட்டுமே சென்று பார்க்க வாய்ப்பு.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”












காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ராமாபுரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி