மாவட்டகுடி கைலாசநாதர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி :
மாவட்டகுடி கைலாசநாதர் சிவன்கோயில்,
மாவட்டகுடி, மன்னார்குடி வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610206.
இறைவன்:
கைலாசநாதர்
இறைவி:
சிவகாம சுந்தரி
அறிமுகம்:
கூத்தாநல்லூரில் இருந்து வடபாதிமங்கலம் வந்து வெள்ளியாற்றை கடந்து காரியாமங்கலம் சாலையில் 4 கிமீ வந்து இடதுபுறம் மாவட்டகுடி கைகாட்டி வழி 2கிமீ சென்றால் மாவட்டகுடி கிராமம் உள்ளது. மிக சிறிய ஊர்தான். ஒரு பெரிய குளத்தின் கரையில் பெருமாள் கோயிலும், மற்றொரு பெரிய குளத்தின் கரையில் சிவன்கோயிலும் உள்ளது. இரு கோயில் இறை மூர்த்திகளும் ஆயிரம் வருடங்கள் பழமையானதாக இருக்கலாம். இங்குள்ள கைலாசநாதர் கோயில் கருவறை மேற்குப்புற குமுதம், ஜகதிகளில் உள்ள சிதைந்த துண்டுக் கல்வெட்டுகளில் - திரிபுவன சக்கரவர்த்தி திரிபுவன வீரதேவரின் பெயரை ஒரு துண்டு கல்வெட்டும், 33-வது ஆண்டு முதல் பின்பற்றப்பட்ட ஒரு கோயில் காரியத்தை மற்றோர் துண்டுக் கல்வெட்டும் குறிப்பிடுகின்றன. இதனை வைத்து இப்போதைய கோயில் 12 – 13 நூற்றாண்டை சேர்ந்ததாக கூறலாம்.
இறைவி சிவகாம சுந்தரி இறைவன்- கைலாசநாதர், இன்று நாம் காண்பது புதியதாக உருவாக்கப்பட்ட கோயில், இறைவன் கிழக்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார். அம்பிகை தெற்கு நோக்கியுள்ளார். ஒரு சிறிய நந்தி இறைவனை நோக்கி உள்ளது கருவறை கோட்டங்களில் தென்முகன் துர்க்கை உள்ளனர். பிரகாரத்தில் விநாயகரும், சுந்தர சுப்ரமணியரும் உள்ளனர். வடகிழக்கில் காலபைரவர் தெற்கில் சூரியனும் உள்ளனர். பிரகாரம் முழுவதும் மூடப்பட்டு கோயிலே ஒரு பெரிய மூடப்பட்ட மண்டபம் போல காட்சியளிக்கிறது. ஒருகால பூஜையில் உள்ளது கோயில் என நினைக்கிறேன். மாதாந்திர முக்கிய விசேஷங்கள் நடைபெறுகின்றன.






காலம்
12 – 13 ஆம் நூற்றாண்டு
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மாவட்டகுடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
மன்னார்குடி, திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி