Thursday Sep 19, 2024

மழவராயநல்லூர் வேதபுரீஸ்வரர் சிவன்கோயில், கடலூர்

முகவரி

மழவராயநல்லூர் வேதபுரீஸ்வரர் சிவன்கோயில், ஸ்ரீமுஷ்ணம் வட்டம், கடலூர் மாவட்டம் – 608702

இறைவன்

இறைவன்: வேதபுரீஸ்வரர்

அறிமுகம்

மழவர் எனும் குலத்தவரின் தலைவர் மழவராயர் எனப்படுவார். அவர்கள் வாழ்ந்த அல்லது ஆளுகைக்கு உட்பட்ட பகுதி மழவராயநல்லூர், மழபாடி, மழவஞ்சேரி எனப்பட்டது. செம்பியன்மாதேவி, வானவன்மாதேவி ஆகியோர் மழவர் குடிபிறந்தோர். அவ்வகையில் சோழமன்னர்களின் பிரதேசமான இப்பகுதியில் அவர்கள் வாழ்ந்து வந்த ஊர் மழவராயநல்லூர் எனப்பட்டது. பல மழவராயநல்லூர்கள் கடலூர், அரியலூர் மாவட்டத்தில் உள்ளன. இந்த ஊர் சேத்தியாதோப்பு – கும்பகோணம் நெடுஞ்சாலை NH36-ல் 4 கிமி தூரம் வந்ததும் குமாரக்குடி எனும் இடத்தில் ஸ்ரீமுஷ்ணம் செல்ல சாலை ஒன்று பிரியும், அங்கிருந்து ½ கிமி அந்த சாலையில் வந்தால் மழவராயநல்லூர் அடையலாம்.

புராண முக்கியத்துவம்

ஊரின் நடுத்தெருவில் ராஜராஜ சோழர்காலத்தில் கட்டப்பட்ட வேதபுரீஸ்வரர் சிவன் கோயில் அமைந்திருந்தது, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கோயிலை இடித்து, கருங்கற்களை அருகாமையில் உள்ள சேத்தியாதோப்பு அணைகட்ட எடுத்து சென்றதாக தகவல்கள் உள்ளன. அதன்பின் அக்கிரஹாரத்தில் உள்ளவர்கள் லிங்கம் மற்றும் பிற மூர்த்திகளை எடுத்துவந்து சிறிய கோயில் கட்டி சிவனை வழிபட்டு வந்துள்ளனர். அக்கோயில் தான் இது என கூறுகின்றனர். கிழக்கு நோக்கியதாக இருக்கும் இக்கோயில் இறைவன் வேதபுரீஸ்வரர் தெற்கு நோக்கியிருக்கும் இறைவியின் பெயர் தெரியவில்லை. உடன் விநாயகர், முருகன், சண்டேசர், நந்தி, உள்ளிட்ட அனைத்து மூர்த்திகளும்உள்ளனர். இக்கோயிலுக்கென நஞ்சை நிலங்கள் உள்ளன. எனினும் அவற்றின் மூலம் வருவாயை பெறவோ, பழமையான கோயிலை மீண்டும் கட்டவோ இந்து சமய அறநிலையத்துறை முயற்சி மேற்கொள்ளவில்லை என கூறுகின்றனர் உள்ளூர் மக்கள். # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

மழவராயநல்லூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

விருதாச்சலம்

அருகிலுள்ள விமான நிலையம்

பாண்டிச்சேரி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top