Friday Dec 27, 2024

மருத்துவக்குடி இரட்டை லிங்ககோயில், திருவாரூர்

முகவரி

மருத்துவக்குடி இரட்டை லிங்ககோயில், மருத்துவக்குடி, குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 609501.

இறைவன்

இறைவன்: சிவன்

அறிமுகம்

இந்த ஊர் குடவாசல் வட்டத்தில் திருவீழிமிழலைக்கு மேற்கில் மூன்று கிமி தூரத்தில் அரசலாற்றின் கரையில் உள்ளது. மருத்துவக்குடியில் சப்த ரிஷிகள் சிவபூஜை செய்ததன் அடையாளமாக இன்றும் ஆங்காங்கே ஊரில் சில இடங்களில் லிங்கங்கள் உள்ளன. அரசலாற்றின் கரையில் ஒரு சிறிய விநாயகர் கோயில் அருகில் இரண்டு லிங்கங்கள் ஓலை கொட்டகையில் தனித்து உள்ளன.

புராண முக்கியத்துவம்

அகத்திய முனிவருக்கு திருமண கோலம் காட்டுவதற்காக சிவபெருமான் திருவீழிமிழலைக்கு வரும்போது அருகில் உள்ள மணவாள நல்லூரில் இருந்து மணக்கோலத்தில் புறப்பட, அப்போது உடனிருந்த சப்த ரிஷிகளும் மருத்துவக்குடியில் தங்கி தங்களது பூஜைகளை முடித்துக்கொண்டு திருவீழிமிழலை சென்றதாக செவி வழி கதை உள்ளது. மணவாளநல்லூர் தென்கரையிலும் மருத்துவக்குடி வடகரையிலும் உள்ளது மருத மரங்கள் அடர்ந்ததால் மருதவனக்குடி என்பதே மருத்துவக்குடி என மருவி இருத்தல் கூடும். # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

மருத்துவக்குடி

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவாரூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top