பெரியகுளம் ராஜேந்திர சோழீஸ்வரர் (பாலசுப்ரமணியர்) திருக்கோயில், தேனி

முகவரி :
பெரியகுளம் ராஜேந்திர சோழீஸ்வரர் (பாலசுப்ரமணியர்) திருக்கோயில்,
பெரியகுளம் கிராமம்,
தேனி மாவட்டம்- 625 601
தொலைபேசி: +91 94885 53077
இறைவன்:
ராஜேந்திர சோழீஸ்வரர், பாலசுப்ரமணியர்
இறைவி:
அறம் வளர்த்த நாயகி
அறிமுகம்:
ராஜேந்திர சோழீஸ்வரர் தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் நகரில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டவர். மூலவர் ராஜேந்திர சோழீஸ்வரர் என்றும், தாயார் அறம் வளர்த்த நாயகி என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோயிலில் சிவபெருமான் முதன்மைக் கடவுளாக இருந்தாலும், பாலசுப்ரமணியர் கோயில் என்றே அறியப்படுகிறது. பெரியகுளத்தில் வராகர் நதிக்கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோவில் 1000 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது. தேனி மாவட்டத்திற்கு வருபவர்களை ஈர்க்கும் முக்கிய புனிதத் தலங்களில் இதுவும் ஒன்றாகும். அருணகிரிநாதர் இக்கோயிலின் முருகன் மீது திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார்
புராண முக்கியத்துவம் :
பெரியகுளம் உள்ளிட்ட பகுதியை கொண்ட நாட்டை ராஜேந்திரசோழன் ஆட்சி செய்து வந்த காலத்தில், ஓர் நாள் வராக நதிக்கரையில் உள்ள அகமலைக்கு வேட்டைக்குச் சென்றான். அப்போது, அங்கு ஒரு பன்றி தனது குட்டிகளுக்கு பால் புகட்டிக் கொண்டிருந்தது. மன்னன் அம்பினால் தாய்ப்பன்றியை வீழ்வீ த்தினான். தாயின் நிலைகண்டு கதறிய குட்டிகள் முன்பு தோன்றிய முருகக்கடவுள், அவற்றிற்கு பால் புகட்டி பசியைப் போக்கி அருளினார். பசியால் துடித்த தன் பாவத்தைப் போக்கவும், பன்றிகளுக்கும் அருளிய முருகனின் திருப்பெருமையை உணர்த்தவும் ராஜேந்திர சோழன் அவருக்காக இக்கோயிலைக் கட்டினான்.
நம்பிக்கைகள்:
இங்கு நீராடி முருகனை வணங்கிட, தீராத வியாதிகளும் தீரும் என்பது ஐதீகம்.
சிறப்பு அம்சங்கள்:
இக்கோயில் காசியில் ஓடும் புண்ணிய கங்கைக்குச் சமமாக கருதப்படும் வராகநதியின் கரையில் அமைந்துள்ளது. வராக நதியின் இருகரையிலும் நேரெதிராக ஆண் மற்றும் பெண் மருத மரங்கள் அமைந்திருக்கின்றன. இந்நதியை பிரம்ம தீர்த்தம் என்றும் கூறுவர்.
பெரியகுளத்தில் ஊரின் எல்லையில் அமைந்திருக்கும் பாலசுப்பிரமணியர் ஆறுமுகங்கள் கொண்டு வள்ளி, தெய்வானையுடன் அருட்காட்சி தருகிறார். அருகில் லிங்க வடிவில் ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி ஆகியோர் கொடி மரங்களுடன் தனித்தனி சன்னதிகளில் வீற்வீறு அருள்பாலிக்கின்றனர். ராஜேந்திரசோழமன்னன் கட்டியதால் இக்கோயில் அப்பகுதியில் பேச்சு வழக்கில் “பெரியகோயில்’ என்ற சிறப்பு பெயருடன் அடையாளம் காணப்படுகிறது.
முருகனுக்கு நேரே அமைந்துள்ள மயில் மண்டபத்தின் மேல் பகுதியில் 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள் பதிக்கப்பட்டுள்ளது. இங்கு மரணத்தை வென்ற மிருத்யுஞ்சரின் சன்னதி இருப்பதால் அதிகளவில் அறுபது, எண்பதாம் திருமணங்கள் நடத்தப்படுகின்றன.
திருவிழாக்கள்:
சித்திரைத்திருவிழா, வைகாசி விசாகம், ஆடிப்பூரம், தைப்பூசம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, பங்குனி பிரமோற்சவம்.












காலம்
1500 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பெரியகுளம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
தேனி
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை