பூந்தமல்லி வரதராஜப்பெருமாள் திருக்கோயில், சென்னை

முகவரி :
அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்,
பூந்தமல்லி,
சென்னை – 600056.
போன்: +91 44 – 2627 2066
இறைவன்: வரதராஜப்பெருமாள்
இறைவி: புஷ்பவல்லி
அறிமுகம்:
பூந்தமல்லி என்னும் பூவிருந்தவல்லி, சென்னையில் இருந்து மே ற்கே 21 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது . இங்கு அமைந்துள்ள திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. திருக்கச்சி நம்பிகளுக்காக, வரதராஜரும், ரங்கநாதரும், திருவேங்கடத்தானும் ஒரே இடத்தில் எழுந்தருளிய திருத்தலமாகும். புஷ்பபுரி க்ஷேத்ரம். ஐந்து நிலை ராஜகோ புரம். ஸ்வேதராஜ புஷ்கரிணி. ஸ்ரீதேவி பூதேவி ஸமேத வரதராஜப் பெருமாள். தாயார் ஸ்ரீ புஷ்பவல்லி. இந்த தலத்தில் பெருமாள் வரதராஜ பெருமாள் என்ற திருநாமத்துடனே யே எழுந்தருளியுள்ளார்.
ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸமேதராக நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். தாயார் புஷ்பவல்லி என்ற திருநாமத்துடன் காட்சி தருகிறார். தாயார் மல்லிகைப்பூவில் இருந்து தோன்றியதால், பூவிருந்தவல்லி என்ற பெயர் இந்த ஸ்தலத்திற்கு ஏற்பட்டதாம். தனிக் கோயில் நாச்சியார். தலவிருக்ஷம் மல்லி வனம். திருக்கச்சி நம்பிகள் இங்கு நந்தவனம் அமைத்து மலர் தொண்டு செய்ததால், புஷ்பமங்கலம் என்றும், தற்போ து பூவிருந்தவல்லி என்று அழைக்கப்படுவதா கவும் கூறுகி றா ர்கள்.
புராண முக்கியத்துவம் :
1009ம் ஆண்டில் இங்கு வசித்த வீரவீராகவர்- கமலாயர் தம்பதியின் மகனாக அவதரித்தவர் திருக்கச்சி நம்பி. இவர் தினமும் காஞ்சிபுரம் சென்று, வரதராஜரை வணங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நந்தவனம் அமைத்து, அங்கு பூத்த மலர்களைத் தொடுத்து மாலையாக்கி சுவாமிக்கு அணிவித்து வந்தார். மேலும், சுவாமிக்கு ஆலவட்ட சேவையும் (விசிறுதல்) செய்வார். வயதான காலத்தில் தள்ளாடியபடியே காஞ்சிபுரம் கிளம்பினார். தன் பக்தனின் சிரமம் கண்ட வரதராஜர், பூந்தமல்லிக்கே வந்து அவருக்கு காட்சி தந்தார். அவர் காட்சி கொடுத்த இடத்தில் பிற்காலத்தில் கோயில் கட்டப்பட்டது.
நம்பிக்கைகள்:
ஜோதிடரீதியாக சூரிய திசை நடப்பவர்கள், தந்தையுடன் கருத்து வேறுபாடு உள்ளோர், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள பெருமாளை வேண்டுகின்றனர
சிறப்பு அம்சங்கள்:
சூரியத்தலம்: வரதராஜப்பெருமாள் புண்ணியகோடி விமானத்தின் கீழ், பின்தலையில் சூரியனுடன் இருக்கிறார். எனவே, இது சூரியத்தலமாக கருதப்படுகிறது. ஜோதிடரீதியாக சூரியதசை நடப்பவர்கள், தந்தையுடன் கருத்து வேறுபாடு உள்ளோர், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் வரதராஜருக்கு செவ்வரளி மாலை அணிவித்து வழிபடுகிறார்கள்.
மல்லிகையில் தாயார்: இங்குள்ள மகாலட்சுமி தாயார் மல்லிகை மலரில் அவதரித்தாள். இவளை புஷ்பவல்லி என்று அழைக்கிறார்கள். இவள் பூவில் இருந்தவள் என்பதால் இவ்வூருக்கு பூவிருந்தவல்லி எனப் பெயர் இருந்தது. இப்போது அது மருவி பூந்தமல்லி ஆகிவிட்டது. பக்தர்கள் புஷ்பவல்லிக்கு மல்லிகை மாலை அணிவித்து வழிபடுவர். வைகாசி பிரம்மோற்ஸவத்தின்போது இவளுக்கு புஷ்பயாகம் நடக்கும். இவ்விழாவின்போது சுவாமி பள்ளியறையில் சயனக்கோலத்தில் எழுந்தருளுவார். பங்குனி உத்திரத்தன்று வரதராஜர், ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள், புஷ்பவல்லி தாயார்களுடன் சேர்ந்து காட்சி தருவார்.
மூன்று கருடசேவை: திருமாலுக்கு விசிறி சேவை செய்ய எண்ணிய திருக்கச்சி நம்பிகள் முதலில் ஸ்ரீரங்கம் சென்றார். அவருக்கு காட்சி தந்த சுவாமி, தான் காவிரிக்கரையில் இருப்பதால் குளிர்ச்சியாக இருப்பதாகவும், எனவே விசிறத் தேவையில்லை என்றும் சொன்னார். பின் அவர் திருப்பதி சென்றார். வெங்கடேசர் அவரிடம் தான் மலை மீதிருப்பதால் தனக்கு குளிர் அதிகம் என்றார். அடுத்து அவர் காஞ்சிபுரம் வந்தார். காஞ்சி வரதராஜர், பிரம்மா நடத்திய யாக குண்டத்தில் இருந்து தோன்றியதால் உக்கிரமாக இருந்தார். அவர் மீது கொண்ட அன்பின் காரணமாக, திருக்கச்சிநம்பிகள் அவருக்கு விசிறி சேவை செய்தார். இந்தக் கோயிலில் திருப்பதி வெங்கடேசர், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சன்னதிகளும் உண்டு. மூவருக்கும் தனித்தனியாக பிரம்மோற்ஸவம் நடத்தப்படுகிறது. பங்குனியில் வரும் ஒரு ஞாயிறன்று மூவரும் திருக்கச்சிநம்பிக்கு கருடசேவை காட்சி தருவர
குரு தரிசனம்: திருக்கச்சிநம்பிகள் கையில் விசிறியுடன் காட்சியளிக்கிறார். இவர் ராமானுஜரின் குரு ஆவார். ராமானுஜரின் அவதார தலமான ஸ்ரீபெரும்புதூரில் அவரது திருநட்சத்திர விழா நடக்கும்போது, இங்கிருந்து மாலை, பரிவட்டம், பட்டு கொண்டு செல்வர். மாசியில் திருக்கச்சிநம்பியின் அவதார விழா நடக்கும்போது, காஞ்சி வரதராஜர் கோயிலில் இருந்து மாலை, பரிவட்டம், பட்டு இங்கு வரும். அன்று வரதராஜர் இவரது சன்னதிமுன் எழுந்தருளுவார். அப்போது நம்பி இயற்றிய தேவராஜ அஷ்டகம் பாடி விசேஷ பூஜை செய்வர். வருடத்தில் இந்நாளில் மட்டும் மூலவர் நம்பிக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) நடக்கும். ஆனி மிருகசீரிஷத்தன்று 108 கலச பூஜை செய்து, வரதராஜர், புஷ்பவல்லி, ஆண்டாள் மற்றும் திருக்கச்சிநம்பிக்கு விசேஷ திருமஞ்சனம் நடக்கும். பிரகாரத்தில்உள்ள திருக்கச்சிநம்பியின் குரு ஆளவந்தாருக்கு, ஆடியில் திருநட்சத்திர விழா நடக்கும்.
திருவிழாக்கள்:
ஆடியில் திருநட்சத்திர விழா











காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்துசமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பூந்தமல்லி
அருகிலுள்ள இரயில் நிலையம்
ஆவடி
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை