புதுப்பத்தூர் புன்னைவனநாதர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி :
புதுப்பத்தூர் புன்னைவனநாதர் திருக்கோயில்,
புதுப்பத்தூர், திருவாரூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610106.
Sakthivel-91594 35055
இறைவன்:
புன்னைவனநாதர்
இறைவி:
ஸ்ரீசாந்தநாயகி
அறிமுகம்:
திருவாரூரில் இருந்து ஆனந்தகுடி சாலையில் சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது புதுப்பத்தூர். இவ்வூரில் இரு சிவன் கோயில்கள் உள்ளன புன்னைவனநாதர் அடுத்து திருமேனிநாதர். இறைவன் – புன்னைவன நாதர். புன்னை மரங்கள் சூழ்ந்த பகுதியில் கோயில் கொண்டிருப்பதால் இவர் புன்னைவன நாதர் என பெயர்கொண்டார். இறைவி – ஸ்ரீசாந்தநாயகி , கருணையும் சாந்தமும் இரு கண்களாக வருவோருக்கெல்லாம் அருள் புரியும் அம்பிகை . பிரதான சாலையில் இருந்து மேற்கில் செல்லும் சிறிய தெருவின் கடைசியில் உள்ளது இந்த கோயில். பெரிய கோயிலாக மேற்கு நோக்கியபடி உள்ளது. திருக்கோயில். பல காலமாக சிதைவடைந்த நிலையில் இருந்த கோயில் சமீபத்தில் குடமுழுக்கு கண்டுள்ளது.
இறைவன் முன்னர் நீண்ட அர்த்த மண்டபம் மகாமண்டபம் உள்ளது, கூம்பு வடிவத்தில் இருந்தவை சிதைவடைந்த பின்னர் மேற்கூரை சமதள கூரையாக்கப்பட்டுள்ளது. அம்பிகையின் எதிரில் அகன்ற கூம்பு வடிவ மண்டபமும் உள்ளது. இந்த மகாமண்டபத்தில் கிழக்கு நோக்கிய செல்வ விநாயகர் சித்தி விநாயகர் என இருவரும், அழகிய சுப்ரமணியரும் உள்ளனர். கருவறை அற்புதமான வேலைப்பாடுகள் கொண்ட செங்கல் பணியாக உள்ளது.
கருவறை கோட்டங்களில் தக்ஷ்ணமூர்த்தி மிக அழகிய கோலத்தில் காட்சியளிக்கிறார். தக்ஷின்யா என்றால் சாந்தம் எனப்பொருள் அதற்கேற்ற சாந்தமான முகம், இருபுறமும் வழியும் சடாமுடிகள், பின்னால் கல்லால மரம்,அதில் இருந்து படமெடுத்து இறங்கும் ஒரு நாகம், கைகளில் அக்கமாலை, அக்னி, சுவடி அபயஹஸ்தம் என ஒரு அற்புதமான மூர்த்தி. அபஸ்மரன் இவரது காலடியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுவும் ஒரு சிறப்பு தான்.
வடபுறம் விஷ்ணு துர்க்கை தனி மாடத்தில் வைக்கப்பட்டுள்ளார். சண்டேசருக்கு அழகான பெரிய சன்னதி உள்ளது. வடகிழக்கில் ஒரு கிணறும், மேற்கு நோக்கிய காலபைரவரும்,இறைவனுக்கு நேர் பின்புறம் சூரியனும் உள்ளனர். கோயிலின் எதிரில் பெரிய குளம் ஒன்றும் உள்ளது.
நம்பிக்கைகள்:
பிற தலங்களில் உள்ளது போல இல்லாமல் இறைவன் மேற்கு நோக்கியும் அம்பிகை இடதுபுறம் கிழக்குநோக்கிய கருவறை கொண்டுள்ளார். இவ்விருவரையும் சேர்ந்தாற்போல் 9 – 11 சுற்றிவந்தால் விரைவில் திருமணத் தடைகள் அகலும்; மாங்கல்ய வரம் கிடைக்கும்















காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
புதுப்பத்தூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி