புதுப்பத்தூர் திருமேனிநாதர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி :
புதுப்பத்தூர் திருமேனிநாதர் திருக்கோயில்,
புதுப்பத்தூர், திருவாரூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610106.
இறைவன்:
திருமேனிநாதர்
இறைவி:
சௌந்தரநாயகி
அறிமுகம்:
இங்கு முன்னொருகாலத்தில் பத்து குளங்களும் பத்து கோயில்களும் இருந்ததால் பத்து ஊர் என வழங்கப்பட்டதாக சொல்வர். தற்போது இரு சிவன்கோயில்கள் அருகருகே உள்ளன. முதல் கோயில் திருமேனிநாதர் கோயில் அடுத்த கோயில் புன்னை வனநாதர். திருமேனிநாதன் கிழக்கு நோக்கிய கோயில் பிரதான சாலையோரம் உள்ளது, பெரிய வளாகத்தில் சன்னதிகள் தனித்தனியாக அமைந்து உள்ளன, கோயில் எதிரில் ஒரு குளம் உள்ளது. இறைவன் திருமேனிநாதர் இறைவி சௌந்தரநாயகி இறைவன் கிழக்கும் இறைவி தெற்கும் நோக்கி சன்னதி கொண்டுள்ளனர். இரு கருவறைகளும் முகப்பு மண்டபம் கொண்டுள்ளன, ஆனால் இரு கருவறைகளையும் இணைக்கும் மண்டபம் இல்லை.
கருவறையின் தென் மேற்கில் வடமேற்கில் இருக்க வேண்டிய விநாயகர் மற்றும் முருகன் சன்னதிகள் இறைவன் கருவறைக்கு இணையாக உள்ளது ஏன் ஏன தெரியவில்லை. விநாயகர் கற்பக விநாயகர் என பெயர் கொண்டுள்ளார். முருகன் வள்ளி தெய்வானை சமேதராக உள்ளார். இறைவன் நேர் எதிரில் நந்தி பலிபீடமும் உள்ளன. கருவறை கோட்டம் தென்புறம் மட்டுமே உள்ளது அதில் தக்ஷணமூர்த்தி உள்ளார், வடக்கில் சண்டேசர் சன்னதி மட்டும் உள்ளது. கருவறையின் நேர் பின்புறம் தகரகொட்டகை ஒன்றில் ஒரு லிங்கமும் அதன் அம்பிகையும், நந்தியும் ஒரு லிங்க பாணமும் உள்ளன. இதனால் இவ்வூரில் பத்து கோயில்கள் இருந்தன என்பது உண்மையாக இருக்கலாம். வடகிழக்கில் பைரவர் ஒரு மண்டபத்திலும், நவகிரகம் ஒரு மண்டபத்திலும் உள்ளன. கோயிலில் ஒரு கால பூஜை மட்டுமே நடைபெறுகிறது என நினைக்கிறேன். குடமுழுக்கு கண்டு பல ஆண்டுகள் ஆகின்றன, கோயிலின் நிலை, கோயிலின் வண்ணபூச்சு, போல வெளிறிப்போய் உதிர்ந்து கொண்டிருக்கிறது.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”











காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
புதுப்பத்தூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி