Sunday Aug 18, 2024

பாண்டூர் ஸ்ரீ கைலாசநாதர் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

பாண்டூர் ஸ்ரீ கைலாசநாதர் சிவன்கோயில், பாண்டூர், செங்கல்ப்டடு வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 209.

இறைவன்

இறைவன்: ஸ்ரீ கைலாசநாதர் இறைவி: ஸ்ரீ வண்டார்குழலி

அறிமுகம்

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த பாண்டூர் கிராமம். வெட்ட வெளியில் இருந்து தற்போது ஷீட்கொட்டகையில் வைத்து வழிபாடுகள் நடக்கின்றன. மூலவர் ஸ்ரீ கைலாசநாதர் என்றும் இறைவியை ஸ்ரீ வண்டார்குழலி என்றும் அழைக்கப்படுகிறார்கள். இங்கு இறைவனும் இறைவியும் வடக்கு நோக்கி காட்சியளிக்கிறார்கள். எதிர்புறம் குளம் உள்ளது. இந்த ஆலயம் அமைந்திருக்கும் இடம் கூடுவாஞ்சேரியிலிருந்து 8 கி.மி. தூரத்தில் உள்ள பாண்டூர் கிராமம். கூடுவாஞ்சேரி-திருப்போரூர், செம்பாக்கம் செல்லும் பேருந்துகள் மூலம் இவ்விடத்தை அடையலாம். தொடர்புக்கு திரு யுவராஜ்-9841939444, திரு தனசேகர்-9710082341, திரு பாபு-9500174491.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பாண்டூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கூடுவாஞ்சேரி

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top