பனங்காட்டூர் கைலாசநாதர் சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி :
பனங்காட்டூர் கைலாசநாதர் சிவன்கோயில்,
பனங்காட்டூர், நாகை வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 609703.
இறைவன்:
கைலாசநாதர்
இறைவி:
அகிலாண்டேஸ்வரி
அறிமுகம்:
காரைக்கால் நகரை ஒட்டிய தமிழக பகுதி இந்த பனங்காட்டூர், அரசலாற்றின் கரையோரம் அமைந்துள்ளது. இப்பகுதியெங்கும் பல கோயில்கள் அருகருகே காணக்கிடைக்கிறது. பல கோயில்கள் தற்போது சிதைந்து லிங்க மூர்த்திகளும் ஆங்காங்கே காணக்கிடைக்கின்றன. பனங்காட்டூரில் ஒரு சிவன் கோயில் உள்ளது, அது நாயக்கர் கால கட்டுமானம் கொண்டு விளங்குகிறது. கிழக்கு நோக்கிய கோயில் உயர்ந்த சுற்று மதில் சுவர்கொண்டு விளங்குகிறது,
இறைவன் கைலாசநாதர் கிழக்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார், அவரின் முன்னம் கூம்பு வடிவ விதானம் கொண்ட மண்டபம் உள்ளது அதில் தெற்கு நோக்கிய அம்பிகை கருவறையும் உள்ளது. முகப்பில் ஒரு அம்பிகை சிலை தனித்து உள்ளது. இறைவன் சற்று நடுத்தர அளவுடைய லிங்கமாக உள்ளார். இறைவன் கைலாசநாதர் இறைவி அகிலாண்டேஸ்வரி இந்த முகப்பு மண்டபத்தின் வெளியில் நந்தி தனி மண்டபத்தில் உள்ளார். கருவறை கோட்டத்தில் தென்முகன் மட்டும் உள்ளார். பிரகார சிற்றாலயங்களில் விநாயகர் மற்றும் முருகன் உள்ளனர். வடமேற்கில் பெருமாள் தனி சிற்றாலயம் கொண்டுள்ளார். வடகிழக்கில் நவகிரகங்கள் பைரவர் மற்றும் சூரியன் உள்ளனர். ஒரு கால பூஜையும் சில விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகளும் நடைபெறுகிறது.












காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பனங்காட்டூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி