நிர்த்தனமங்கலம் விஸ்வநாதர் சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி :
நிர்த்தனமங்கலம் விஸ்வநாதர் சிவன்கோயில்,
நிர்த்தனமங்கலம், நாகை வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 611102.
இறைவன்:
விஸ்வநாதர்
இறைவி:
விசாலாட்சி
அறிமுகம்:
நாகப்பட்டினத்தின் மேற்கில் உள்ள நாலுரோட்டில் இருந்தது வேளாங்கண்ணி சாலையில் 11 கிமீ சென்றால் பரவை கிராமம், இதன் மேற்கில் செல்லும் சாலையில் 3 கிமீ தூரம் சென்றால் நிர்த்தனமங்கலம் கிராமம் உள்ளது. நிர்த்தனம் – நர்த்தனம் இரண்டும் நடனம் எனும் ஒரே பொருளைத்தான் குறிக்கின்றன. படைத்தல், காத்தல், அழித்தல், அழித்ததை மறையும்படி செய்தல், மறைந்ததை மீண்டும் அருளல் ஆகிய ஐந்து தொழில்களும் சரிவர நடக்கும்படி ஆடிடும் திருக்கோலம் தான் சந்தத நிர்த்தனம், அப்படியொரு நடனம் புரிந்த தலம் தான் இந்த நிர்த்தனமங்கலம்.
கடுவையாற்றின் தென் கரையில் உள்ளது இந்த கிராமம். கிழக்கு நோக்கி செல்லும் ஆறு இவ்வூரில்தான் உத்திரவாகினியாக வடக்கு நோக்கி திரும்புகிறது இதனால் இவ்வூர் ஆன்மீக முக்கியத்துவம் பெறுகிறது, மக்கள் அமைதியான வாழ்வினை வாழ்வார்கள். இவ்வூரின் மத்தியில் கிழக்கு நோக்கிய திருக்கோயிலாக ஒரு அழகிய சிவன் கோயில் அமைந்துள்ளது, ஐந்நூறு ஆண்டுகள் பழமை என சொல்கின்றனர். கோயிலின் தென்புறம் ஒரு சதுரவடிவ குளம் ஒன்றும் உள்ளது. முகப்பில் மூன்று நிலை ராஜகோபுரம் உள்ளது இறைவன் – விஸ்வநாதர் இறைவி விசாலாட்சி
ராஜகோபுரம் தாண்டியதும் கிழக்கு நோக்கிய இறைவன் கருவறையும் அர்த்தமண்டபமும், முகப்பில் நீண்ட முகப்பு மண்டபம் ஒன்றும் அமைந்துள்ளது. அதன் வெளியில் ஒரு நந்தி மண்டபம் அமைந்திருக்கிறது. அம்பிகை தெற்கு நோக்கி கோயில் கொண்டுள்ளார். நடராஜர் கருவறை ஒன்றும் உள்ளது. கருவறையில் இறைவன் நடுத்தர அளவுடைய லிங்கமாக உள்ளார், கருவறை கோட்டங்களில் தென்முகனும் அருகில் விநாயகர் உள்ளார், பின்புறம் லிங்கோத்பவர் துர்க்கை உள்ளனர். தனி சிற்றாலயங்களில் விநாயகர் ஐயப்பன், முருகன் மகாலட்சுமி உள்ளனர் வடகிழக்கில் ஒரு கிணறும் உள்ளது. வடகிழக்கில் பைரவர் சூரியன் தென்புறம் சந்திரன் உள்ளனர்.
சிறப்பு அம்சங்கள்:
இக்கோயிலில் பிரதோஷம் சிறப்பு என்கின்றனர். கல்யாண வரம் வேண்டி வரும் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரதோஷத்தில் கலந்துகொண்டு, இறைவனை வேண்டி பிரதோஷ நாயகரை ஆண்கள் ஒருபுறமும் பெண்கள் ஒருபுறமும் சுமந்துகொண்டு வந்து மூன்று சுற்று சுற்றுகின்றனர். இப்படி செய்வோருக்கு விரைவில் நல்ல வரன்கள் கிடைக்கும் என சொல்கின்றனர்.








காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
நிர்த்தனமங்கலம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி