நாகப்பட்டினம் மலையீஸ்வரன் திருக்கோயில்

முகவரி :
நாகப்பட்டினம் மலையீஸ்வரன் திருக்கோயில்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 611001.
இறைவன்:
மலையீஸ்வரன்
அறிமுகம்:
நாகை பன்னிரு கோயில்களில் பழமையான திருத்தலம் இந்த மலைஈஸ்வரர் கோயில். பல்லவர்களாலும், திருப்பணிகள் செய்யப்பட்டது, அதற்குமுன் கோச்செங்கட் சோழன் கட்டிய பழமையான மாடக்கோயில்களில் ஒன்று எனப்படுகிறது. முகப்பில் ராஜகோபுரம் இல்லை. மொட்டை கோபுரத்தில் ரிஷபவாகன காட்சி மட்டும் சுதையாக உள்ளது மாடக்கோயில் மேல் ஏறும் முன்னர், கீழே நந்தியும் பலிபீடமும் மகாகணபதியின் முன் உள்ளன, ஆனால் அவை இறைவன் கைலாசநாதருக்காக உள்ளவை. 24படிகளேறி சென்றால் படிகளின் முன்னர் நடராஜபெருமான் சன்னதி உள்ளது ஆனால் மூர்த்தி இல்லை, அதனை ஒட்டி கிழக்கு நோக்கிய சுவாமி சன்னதியில் சோடச லிங்கமூர்த்தியாக இறைவன் கைலாசநாதரை காணலாம். அம்பிகை தெற்கு நோக்கி சன்னதி கொண்டுள்ளார்.
கருவறை கோட்டத்தில் தென்முகன் சன்னதி, மற்றும் சங்குசக்கரம் கொண்ட துர்க்கையின் சன்னதியும் உள்ளது. இறைவன் இறைவி கருவறைகளை சுற்றி வர மேல் தளத்தில் இடமுள்ளது, ஆனால் வடக்கில் அதற்கு தடை ஏற்படுத்தி உள்ளனர். அடுத்து தரை தளத்தில் சுற்றிவர ஒரு பிரகாரம் உள்ளது. மேற்கில் நீண்ட திருமாளப்பத்தி உள்ளது அதில் விநாயகர், ஜுரதேவர், நாகர், முருகன், மகாலட்சுமி மற்றும் அபூர்வமாக வடமேற்கில் கிழக்கு நோக்கிய சனிபகவான் உள்ளார் அது ஏன் என அறியமுடியவில்லை. சில சன்னதிகளில் பெயர் இல்லை. வடகிழக்கில் பைரவர் சூரியன் உள்ளார். பெரிய வேப்பமரமும் உள்ளது.
டச்சுக்காரர்கள் நாகையில் கோட்டை கட்டி ஆட்சி செய்தபோது இக்கோயிலை புதுப்பித்தனர் என ஒருகல்வெட்டு தகவல் உள்ளது. இறைவனை பல்வேறு நீலாயதாட்சி அம்மன் கோயிலின் தெற்கு மாடவீதிக்கு அருகில் உள்ளது. இக்கோயிலின் தென்கிழக்கில் ஒரு தீர்த்த குளம் தெற்கு மாடவீதியை ஒட்டி இருந்ததாக தகவல். இக்கோயிலை பழமை அழகுடன் பராமரித்தால் நாகையில் கயிலையை காணலாம்.
புராண முக்கியத்துவம் :
இறைவனை பல்வேறு தலங்களில் காண யாத்திரையாக வந்த வேத வியாசரின் தந்தை பராசரர்க்கு பதினாறாயிரம் சிகரங்கள் கொண்ட கயிலையை தரிசிக்கும் ஆவல் வந்தது அதுவும் அம்மலையை நாகையில் தரிசனம் செய்ய ஆவல் கொண்டார். எனவே ஒரு பட்டை ஆயிரம் சிகரங்களுக்கு சமானம் என பதினாறு பட்டை கொண்ட சோடச லிங்கமூர்த்தியை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார், அதன் பயனாக தை பூச நன்நாளில் ஈசனின் கயிலை தரிசனம் கண்டு கல்ப காலம் வரை வாழும் வரம் பெற்றார் என்பது ஐதீகம்












காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி