நாகத்தி பக்தவத்சலேஸ்வரர் சிவன்கோயில், தஞ்சாவூர்

முகவரி :
நாகத்தி பக்தவத்சலேஸ்வரர் சிவன்கோயில்,
நாகத்தி, பூதலூர் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் – 613205.
இறைவன்:
பக்தவத்சலேஸ்வரர்
இறைவி:
சௌந்தரநாயகி
அறிமுகம்:
தஞ்சாவூரிலிருந்து திருவையாறு செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள அம்மன்பேட்டை வெட்டாற்று பாலத்திலிருந்து மேற்கு நோக்கிச் செல்லும் சாலையில் வெட்டாற்றின் வடகரையில் 5 கிலோ மீட்டர் தூரம் பயணித்து அங்கு அமைக்கப்பட்டிருக்கும் பாலம் வழியே ஆற்றின் தென்கரையை அடைந்தால், ஆற்றிடைதீவாக உள்ள நாகத்தி என்னும் ஊரை அடையலாம். சிவாலயம் ஊரின் கிழக்கு கோடியில் பெரியதாக அமைந்துள்ளது.
இறைவன் – பக்தவத்சலேஸ்வரர் இறைவி – சௌந்தரநாயகி பல சிறப்புக்கள் உடைய இக்கோயில் இறைவன் மேற்கு நோக்கியவர் என்பது சிறப்பாகும். அம்பிகை தெற்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார். இறைவன் பல யுகங்கள் பழமையானவர், இக்கோயில் பிற்கால சோழர்களின் காலத்தில் கட்டப்பட்டு நாயக்க மன்னர்களால் திருப்பணிகள் செய்யப்பட்டு உள்ளது. கருவறை விமானம் உயர்ந்து நிற்கிறது. கோஷ்டங்களில் தெய்வங்கள் இல்லை. முகப்பில் உயர்ந்த கூம்புவடிவ மண்டபம் உள்ளது.
புராண வரலாற்றை நினைவூட்டும் வண்ணம் இந்த மண்டபத்தில் கிழக்கு நோக்கியபடி பெருமாளும் அருகில் ஒரு அம்பிகை இரு கரங்களில் தாமரை கொண்டவளாக காட்சியளிக்கிறார். சண்டேசர் தக்ஷணமூர்த்தி அனைவருமே பாதுகாப்பு காரணங்களுக்குகாக உள் மண்டபத்திலேயே உள்ளனர். இரிவனின் நேர் எதிரில் முகப்பு மண்டபம் தாண்டி வெளியில் ஒரு தகர கொட்டகையின் கீழ் அதிகார நந்தி உள்ளார். அதுப்போல் அம்பிகை எதிரில் உள்ள நந்தியும் மண்டபத்தின் வெளியில் தான் உள்ளது. சந்தன விருட்சம் இறங்கிய தீர்த்த குளம் இக்கோயிலின் தென்கிழக்கு மூலையில் உள்ளது.
புராண முக்கியத்துவம் :
இவ்வூரில்வீடு கட்டுவதற்காக குழி தோண்டியபோது அவர்கள் அங்கு 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட சுடுமண் உறைகிணற்றையும், சிவப்பு மற்றும் கருப்பு மட்கலங்களின் உடைந்த பாகங்களையும் கண்டறிந்தனர் சோழ அரசன் சேந்தன், அவன் தந்தை அழிசி ஆகியோர் வாழ்ந்த மாளிகைகள் இருந்த முக்கிய நகர்ப்பகுதியாக விளங்கிய இடம் தற்போதைய நாகத்தியே ஆகும்.
அக்னியாக வந்திறங்கிய சந்தன விருட்சத்தை சந்தன குழம்பாக இறைவன் காலடியில் ஏற்றார். இதனால் வேத ஞானம் பெற்று, கைகளில் தாமரைகளைத் தாங்கிய ஸ்ரீசௌந்தர நாயகியாக, நாகத்தியில் அவதாரம் கொண்டார். ஈஸ்வரனின் திருநாவில் உதித்த வேதாக்னி சுயம்பு மூர்த்தியாக உதித்திட, இதுவே நாகத்தி சிவலிங்கம் ஆயிற்று! “நாஅகம்தீ” என்பதே நாகத்தி என்பது புராண வரலாறு. இப்படி இறைவன் சுயம்புவாக தோன்றியது சித்திரை சதயம். எனவே ஸ்ரீபக்தவத்சலேஸ்வரர் தோன்றிய சித்திரைச் சதய நாளில் இங்கு சந்தனக் காப்பிட்டு வழிபடுவது பெரும் பேறுகளைத் தருவதாகும். இறைவனின் எதிரில் இருதய கமல கோலத்தை இத்திருக்கோயிலில் அரிசி மாவால் வரைந்து அதில் 16 தாமரை மலர்களை வைத்து பூசித்தால் எத்தகைய இருதய சம்பந்தமான நோய்களுக்கும் இரத்தம் சம்பந்தமான நோய்களுக்கும் நிவாரணம் கிட்டும். இருதயகமல கோலத்தை எங்கும் பிரிவு ஏற்படாமல் ஒரே கோடாக, இணைந்த சக்தியுடன் அமைப்பதே சிறப்பாகும்.












காலம்
1200 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
நாகத்தி
அருகிலுள்ள இரயில் நிலையம்
தஞ்சாவூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி