நரசிங்கம்பேட்டை பொன்னியம்மன் (ஹரிஹரபுத்திரர்) திருக்கோயில், திருவாரூர்

முகவரி
அருள்மிகு பொன்னியம்மன் (ஹரிஹரபுத்திரர்) திருக்கோயில், மஞ்சக்குடி அஞ்சல், குடவாசல் தாலுகா, நரசிங்கம்பேட்டை, திருவாரூர் மாவட்டம் – 612610. போன்: +91 95857 35434
இறைவன்
இறைவி: பொன்னியம்மன்
அறிமுகம்
பொன்னி அம்மன் கோயில் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகாவில் மஞ்சக்குடியில் நரசிங்கம் பேட்டையில் அமைந்துள்ள கோயிலாகும். மூலவர் பொன்னி அம்மன் என்று அழைக்கப்படுகிறார். வேம்பு மற்றும் இருவாட்சி (இரண்டும் பூக்கள் அல்லது பழங்கள் இல்லாமல்). இந்த இடம் நரசிம்மபுரம் என்று அழைக்கப்பட்டது, ஆனால் இப்போது நரசிங்கம் பேட்டை என்று தற்போது அழைக்கப்படுகிறது.
புராண முக்கியத்துவம்
500-1000 ஆண்டுகளுக்கு மேற்பட்டதாகவும் மன்னார்காலத்தில் கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. வயல் சூழ்ந்த பகுதியில் கோயில் உள்ளது. காவல் தெய்வமாக பொன்னியம்மனும், எல்லை தெய்வமாக (ஐயனார்) ஹரிஹர புத்திரனும் அருள்பாலிக்கின்றனர். சிறிய கொட்டகையாக இருந்ததை கிராமத்தினர் வரி வசூல் செய்து கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தினர். கடந்த 2008ம் ஆண்டு கோயில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. பலரும் குலதெய்வ வழிபாடு நடத்தி வருகின்றனர். மேற்குப்பக்கம் வாயிலில் மகா மண்டபத்தில் 50 பேர் அமரும் இடவசதி ஹரிகரபுத்திரன் பூரணகலா மற்றும் புஷ்பக்கலாடுன் மேற்குபக்கம் பார்த்த வகையில் அருள்பாலிக்கின்றார். வடக்குப் பக்கம் வீரன், எதிரில் தல விருட்சம் உள்ளது. வடக்குப்பக்கம் வாயிலில் 10 தூண்கள் அமைக்கப்பட்ட மகா மண்டபத்தில் வடக்குபக்கம் பார்த்த வகையில் பொன்னியம்மன் அருள்பாலிக்கிறார். உள்பிராகாரத்தில் விநாயகரும் வடக்குப்பக்கம் பார்த்த வகையில் அருள்பாலிக்கிறார். கிராம தேவதை மற்றும் கிராம காவல்தெய்வமாக அப்பகுதியினர் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
நம்பிக்கைகள்
திருமணம் மற்றும் புத்திரபாக்கியம் உள்ளிட்ட சகல ஐஸ்வர்யங்கள் கிடைக்க பிரார்த்திக்கின்றனர்.
திருவிழாக்கள்
அம்மன் மற்றும் வீரனுக்குரிய அனைத்து விழாக்களும் கொண்டாடப்படுகின்றன. இரு தெய்வங்களும் குல தெய்வ வழிபாட்டிற்குரியவர்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மஞ்சக்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
கொரடாச்சேரி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி