Thursday Sep 19, 2024

நங்கநல்லூர் லட்சுமி நரசிம்மர் (நவநீதகிருஷ்ணன்) திருக்கோயில், சென்னை

முகவரி

அருள்மிகு லட்சுமி நரசிம்மர் நவநீதகிருஷ்ணன் திருக்கோயில், நங்கநல்லூர், சென்னை. போன்: +91 44 2224 9881

இறைவன்

இறைவன்: லக்ஷ்மி நரசிம்மர்

அறிமுகம்

லக்ஷ்மி நரசிம்மர் கோயில் தமிழ்நாட்டில் உள்ள சென்னை நகரத்தில் உள்ள நங்கநல்லூரில் அமைந்துள்ள விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். இந்த கோவில் நவநீத கிருஷ்ணன் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயில் எம்எம்டிசி காலனியில் உள்ள தன்மீஸ்வரர் கோயிலின் பின்புறம் அமைந்துள்ளது. இந்த கோவில் சென்னை மண்டலத்தில் உள்ள பழமையான நரசிம்மர் கோவில்களில் ஒன்றாகும். இக்கோயிலில் அதன் உறுப்பினர்களிடமிருந்து மட்டுமே நன்கொடைகளை ஏற்றுக்கொள்கிறது, பொதுமக்களிடமிருந்து அல்ல.

புராண முக்கியத்துவம்

பரசுராமரின் தந்தையான ஜமதக்னி முனிவருக்கு ஒரு ஆசை ஏற்பட்டது, அது பிரகலாதனுக்காக தூணைப்பிளந்து கொண்டு வந்த நரசிம்மரை தரிசிக்கவேண்டும் என்பதுதான். அதற்காக யாகம் நடத்தினார். யாகத்தீயின் நடுவே உக்கிர கோலத்தோடு தோன்றினார் நரசிம்மர். அவரைக் கண்டு பரவசப்பட்ட ஜமதக்னி, சாந்தமாக இருக்கும்படியும், தான் பெற்ற தரிசனம் மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டுமென வரம் கேட்டார். பெருமாளும் லட்சுமியைத் தாங்கி லட்சுமி நரசிம்மராய் புன்னகை சிந்த அத்தலத்தில் எழுந்தருளினார். நங்கையாகிய லட்சுமி தோன்றிய இடம் நங்கைநல்லூராகி, நங்கநல்லூர் என திரிந்தது. காலப்போக்கில் பூமியில் புதையுண்டது. 1975ல் இங்கு ஒரு கிருஷ்ணர் கோயில் கட்ட பிரசன்னம் பார்க்கப்பட்டது. அந்த இடத்தின் கீழ் ஒரு ஆலயம் புதைந்துள்ளது தெரியவந்தது. இங்கு விஷ்ணு சிலை கண்டெடுக்கப்பட்டது. அத்துடன், 1500 ஆண்டுக்கு முந்திய பல்லவர் காலத்திய நரசிம்மர் ஆலயம் இருந்தது உறுதியானது. அதன் பின்னர் கிருஷ்ண பக்த ஜனசபா அறக்கட்டளை உருவாக்கப்பட்டு, கோயில் எழுப்பப்பட்டது. கிருஷ்ணரும், நரசிம்மரும் இணைந்து வந்ததால், லட்சுமி நரசிம்ம நவநீதகிருஷ்ணன் கோயில் என பெயரிடப்பட்டது.

நம்பிக்கைகள்

இங்குள்ள பிரார்த்தனை சக்கரத்தின் மீது பக்தர்கள் கைகளை வைத்து வணங்கி நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை. இங்குள்ள நரசிம்மருக்கும், கிருஷ்ணருக்கும் வெண்ணெய், புது வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

எழிலான ஐந்து நிலை ராஜகோபுரத்தின் முன் உள்ள மண்டபத்தின் தெற்கே ரங்கநாதன் பள்ளி கொண்டுள்ளார். வடக்கே நர்த்தன கிருஷ்ணர் ஆடுகிறார். கிழக்கில் லட்சுமி நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். நான்கு கரங்களோடு காட்சிதரும் நரசிம்மரின் மேலிரு கரங்கள் சங்கு சக்கரம் தாங்கியிருக்க, வலது கீழ்கரம் அபயமுத்திரை காட்டுகிறது. இடது கீழ் கரம் மடியில் அமர்ந்திருக்கும் மகாலட்சுமியை அணைத்தபடி இருக்கிறது. சீனிவாசப்பெருமாள், சஞ்சீவி ஆஞ்சநேயர், பதினொரு ஆழ்வார்கள், ஆண்டாள், சக்கரத்தாழ்வார் சன்னதிகள் உள்ளன. கண்ணாடி மாளிகை அற்புதமாக இருக்கிறது.

திருவிழாக்கள்

நரசிம்ம ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

நங்கநல்லூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

பழவந்தாங்கல்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top