துறையூர் நந்திகேஸ்வரர் திருக்கோயில், திருச்சி

முகவரி :
துறையூர் நந்திகேஸ்வரர் திருக்கோயில், திருச்சி
துறையூர் – ஆத்தூர் ரோடு,
துறையூர், திருச்சி மாவட்டம்,
தமிழ்நாடு 621010
இறைவன்:
நந்திகேஸ்வரர்
இறைவி:
சம்பத் கௌரி அம்மன்
அறிமுகம்:
நந்திகேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூரில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மூலவர் நந்திகேஸ்வரர் என்றும், தாயார் சம்பத் கௌரி அம்மன் என்றும் அழைக்கப்படுகிறார். இந்த கோவில் 8-14 ஆம் நூற்றாண்டுகளில் புதுப்பிக்கப்பட்டது.
இக்கோயில் துறையூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயில் துறையூரில் இருந்து சுமார் 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. அருகிலுள்ள ரயில் நிலையம் திருச்சியில் (51 கிமீ) மற்றும் அருகிலுள்ள விமான நிலையம் திருச்சியில் (52 கிமீ) அமைந்துள்ளது.
புராண முக்கியத்துவம் :
பிரதோஷ நேரத்தில் சிவபெருமான், நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே நின்று நடனம் புரிகிறார். அப்போது சிவதரிசனம், சிவாலய பிரதட்சணம் செய்தால் ஒரு சுற்றுக்கு, கோடி சுற்று சுற்றிய பலன் உண்டாகும் என்கின்றனர். இந்த நேரத்தில் நந்தீஸ்வரரின் இருகொம்புகளுக்கு நடுவிலும், நம் பார்வையை செலுத்தி இறைவனை வழிபட வேண்டும் என்பது நியதி. இந்தக் கோயிலில் நந்தீஸ்வரர் மட்டும் தனித்திருப்பதால், பிரதோஷ வேளையில் இங்கு வழிபட்டால் பலன் இரட்டிப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை.சோழமன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோயில் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலின் உபகோயிலாகும். இந்தக் கோயில் பற்றி ஒரு சிலரது கருத்து வேறு மாதிரியாக உள்ளது. இது தாயுமான சுவாமியின் அதிகார நந்தியாக இருந்தது. காலப்போக்கில் கோயிலுக்குச் செல்லும் பாதைகள் அடைக்கப்பட்டதால், நந்தி மண்டபம் தனிமைப்படுத்தப் பட்டது.அதுவே தனிக்கோயில் போல தோற்றமளிக்கிறது என்கின்றனர். தற்போது நந்திக்கு மட்டுமே பூஜைகள் செய்யப்படுகிறது.
நம்பிக்கைகள்:
பிரதோஷ காலங்களில் சந்தனக்காப்பு உட்பட பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது.
சிறப்பு அம்சங்கள்:
இங்குள்ள நந்தி ஏழு அடி உயரமும், பத்து அடி நீளமும், 16 அடி சுற்றளவும் கொண்டது. பிரதோஷ காலங்களில் சந்தனக்காப்பு உட்பட பல்வேறு அலங்காரங்கள் செய்யப் படுகிறது. பக்தர்கள் தங்கள் துயர் துடைக்க இங்கு வருகின்றனர். நந்திக்கு பின்புறம் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த 40 அடி உயரத்தில் கல் கொடிமரம் உள்ளது. இதன் மேலும் ஒரு நந்தி சிலை இருக்கிறது. நந்திக்கு பூஜையை தொடர்ந்து இந்த கொடி மரத்துக்கும் பூஜை செய்யப்படுகிறது. கொடிமரத்தின் அடியில் செவ்வந்திநாதர் என்றழைக்கப்படும் செவ்வந்தி விநாயகர் சன்னதி மேற்கு பார்த்த நிலையில் உள்ளார்.அருகில் வீரஆவீ ஞ்சநேயர் சன்னதி உள்ளது.
திருவிழாக்கள்:
பிரதோஷ காலங்களில் நந்திக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.





காலம்
1500 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
துறையூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருச்சி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி