திருமாலயன்பொய்கை காளகண்டேஸ்வரர் சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி :
திருமாலயன்பொய்கை காளகண்டேஸ்வரர் சிவன்கோயில்,
திருமாலயன்பொய்கை, கீழ்வேளூர் வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 611105
இறைவன்:
காளகண்டேஸ்வரர்
இறைவி:
வரந்தர நாயகி
அறிமுகம்:
திருவாரூர் – கங்களாஞ்சேரி நாகூர் சாலையில் சோழங்கநல்லூரின் வடக்கில் மூன்று கிமீ தொலைவில் உள்ளது திருமாலயன் பொய்கை. சோழங்கநல்லூரில் இருந்து கிராமசாலை தான், சற்று சிரமத்துடன் செல்ல வேண்டும்.
இறைவன் -காளகண்டேஸ்வரர் இறைவி-வரந்தர நாயகி திருமாலயன் பொய்கை திருத்தலம். பல சிறப்புடைய தலம் எனினும் பல ஆண்டுகளாக வழிபாடின்றி இடிந்து சிதைந்து பெரும் மரமொன்று கோயிலை மூடும் அளவுக்கு நிலைமை ஆனது. புதர்கள் மண்டிய ஒரு கட்டடத்தைத்தான் நம்மால் பல ஆண்டுகளாக காணமுடிந்தது. ஒரு சிறிய ஓட்டு கட்டடத்தில் இருந்த தெய்வ மூர்த்தங்களை மட்டும் எடுத்து வைத்து பிரதிஷ்டை செய்து இயன்றவரை பூஜைகள் செய்துகொண்டிருந்தனர். காஞ்சி பெரியவர் இந்தப் பகுதிக்கு விஜயம் செய்தபோது, சிறிய கட்டடத்தில் இருந்த தெய்வமூர்த்தங்களை கண்டு ஆலயத்தின் பரம்பரை அறங்காவலர் குடும்பத்தைச் சேர்ந்த நாராயணஸ்வாமி ஐயரை அழைத்து எப்படியாவது கோயிலைப் புதுப்பித்துக் கட்டவேண்டும் என சொல்ல, மெல்ல மெல்ல பணிகள் வேகமெடுத்து இன்று குடமுழுக்கு கண்டது. மேற்கு
நோக்கிய திருக்கோயில், கோயில் வளாகத்தை சுற்றி நாற்புறமும் பெரும் அகழி போன்ற அமைப்பு இருந்ததை காணமுடிகிறது, காலப்போக்கில் ஆக்கிரமிப்பாககிக் கொண்டுஇருக்கிறது. இறைவன் மேற்கு நோக்கிய கருவறையும் இறைவி தெற்கு நோக்கியும் உள்ளார். இறைவன் கருவறை வாயிலில் விநாயகர் மற்றும் முருகன் உள்ளனர். இறைவனது கருவறை கோட்டத்தில் பிரம்மன் லிங்கோத்பவர், தக்ஷணமூர்த்தி ஆகியோர் உள்ளனர். பிரகாரத்தில் வடக்கில் சண்டேசரும், பைரவரும் சனியும், இந்தக் கோயிலின் முன்புறமுள்ள திடலில் வனத் துறையினர் மரக்கன்றுகளை நட குழி எடுத்தபோது சில உலோக சிலைகள் கிடைத்தன, இவற்றின் தொன்மை குறித்து ஆராய்ந்து இவற்றை மீண்டும் இக்கோயிலில் பூஜைக்கு வைக்கப்பட வேண்டும்.
புராண முக்கியத்துவம் :
இறைவனும் இறைவியும் விளையாட விரும்பி அமர்கின்றனர். பக்கத்துக்கு நான்கு பேர் இருந்தால் தானே ஆட்டம் சூடு பிடிக்கும், தீர்ப்பு சொல்வதற்கு ஒரு நடுவரும் வேண்டுமல்லவா? அந்த இடத்தை திருமால் ஏற்றுக்கொள்கிறார். ஆட்டம் சூடுபிடிக்கிறது. ஆட்டத்தில் தேவி வெற்றி பெறுகிறாள். ஆனால், திருமால் பெருமான்தான் வெற்றி பெற்றார் என்று தீர்ப்பு கூறுகிறார். பிரம்மன் பொய் சொல்ல விரும்பாமல் அமைதியாக இருக்கிறார். அதனால் அம்பிகை சினம் கொண்டு திருமாலை பாம்பாக மாறும்படி சபித்துவிடுகிறாள். பிரம்மனும் கோபத்திற்கு ஆளாகிறார். தவறான தீர்ப்பு கொடுத்த திருமால், அம்பிகையின் சாபத்தை ஏற்று சாப விமோசனம் பெற பூமிக்கு வந்து இறைவன் இறைவியை எண்ணி தவம் இருந்தார். இருவரும் நேரில் தோன்றி திருமாலுக்கு தரிசனமும் சாபவிமோசனமும் அருளினர். திருமாலும் பிரம்மனும் இத்தலத்தில் ஒரு பொய்கை ஒன்றை உருவாக்கி அதில் நீராடி இறைவனை வழிபட்ட தலம் இது. அதனால் இது திருமால்-அயன்-பொய்கை எனப்பட்டது. இவர்களுக்கு தரிசனமும் சாபவிமோசனமும் அருளிய இறைவன் இங்கேயே கோயில் கொண்டு, வழிபடும் பக்தர்களுக்கு அவர்கள் கேட்கும் வரங்களை அருள்கின்றனர்.















காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருமாலயன்பொய்கை
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி