திருத்தங்கல் நின்ற நாராயணப்பெருமாள் திருக்கோயில், விருதுநகர்

முகவரி
அருள்மிகு நின்ற நாராயணப்பெருமாள் திருக்கோயில் திருத்தங்கல் சிவகாசி, விருதுநகர் மாவட்டம். தமிழ்நாடு 626130, முத்துபட்டாச்சாரியார் : 9442665443
இறைவன்
இறைவன்: நின்றநாராயணன் இறைவி: அண்ணநாயகி
அறிமுகம்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தங்காமலை மீது திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோயில் அமைந்திருக்கிறது. இது 108 திவ்யதேசங்களில், 91 வது திவ்ய தேசம். பழம்பெருமை மிக்க பாரம்பர்ய வரலாறு இந்தத் தலத்துக்கு உண்டு. இந்தக் கோயில், திருமலை நாயக்கர் மன்னரால் கட்டப்பட்டது. இங்கு, மூலவர் நின்ற நாராயணப்பெருமாள் மேல் நிலையில் நிற்கும் கோலத்தில் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். இவருடன் ஸ்ரீதேவி, பூமாதேவி, நீளாவேதி ஆகிய மூவரும் உடன் இருக்கின்றனர். தாயார் செங்கமலத்தாயார் தகச் சந்நிதியில் வீற்றிருக்கிறார். மூலவர் நின்ற நாராயணப் பெருமாள் எனும் பெயரிலும், உற்சவர் `திருத்தங்கலாப்பன்’ என்ற திருப்பெயரிலும் வழிபடப்பெறுகிறார். இந்தத் திருக்கோயிலின் பிரதான வாயில் தெற்குப் பக்கமாகவும் மற்றொரு வாயில் கிழக்குப் பக்கமாகவும் அமைந்திருக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக நுழைவு வாயில் புழக்கத்தில் இல்லை. தெற்கு வாயிலில் அமைந்திருக்கும் பதினெட்டு படிகளின் வழியாகத்தான் ஏறிச் செல்லவேண்டும். முதலில் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கருங்கல் மண்டபம், மேற்கூரையுடன் நம்மை வரவேற்கிறது. தீர்த்தம், பாபநாச தீர்த்தம், அர்ச்சுனா நதிஆகமம்/பூஜை :வைகானஸ ஆகமம்புராண
புராண முக்கியத்துவம்
பகவான் நாராயணன் திருப்பாற்கடலில் சயனித்திருந்த போது, அவர் அருகில் இருந்த ஸ்ரீதேவி, பூமாதேவி, நீளாதேவி ஆகிய மூன்று தேவியரிடையே, தங்களில் யார் உயர்ந்தவர் என்ற சர்ச்சை ஏற்பட்டது. ஸ்ரீதேவியின் தோழிகள்,””மற்ற தேவிகளைக்காட்டிலும் எங்கள் ஸ்ரீதேவியே உயர்ந்தவள். இவளே அதிர்ஷ்ட தேவதை. இவளே மகாலட்சுமி(ஸ்ரீ)என்று அழைக்கப்படுபவள். தேவர்களின் தலைவன் இந்திரன் இவளால் தான் பலம் பெறுகிறான். வேதங்கள் இவளைத் திருமகள் என்று போற்றுகின்றன. பெருமாளுக்கு இவளிடம் தான் பிரியம் அதிகம். இவளது பெயரை முன்வைத்தே பெருமாளுக்கு ஸ்ரீனிவாசன், ஸ்ரீபதி, ஸ்ரீநிகேதன் என்ற திருநாமங்கள் உண்டு. பெருமாள் இவளை தன் வலது மார்பில் தாங்குகிறார்,”என்று புகழ்பாடினர். பூமாதேவியின் தோழியரோ,””இந்த உலகிற்கு ஆதாரமாக விளங்குபவள் எங்கள் பூமிதேவியே. அவள் மிகவும் சாந்தமானவள். பொறுமை நிறைந்தவள். பொறுமைசாலிகளை வெல்வது அரிது. இவளைக்காப்பதற்காகவே பெருமாள் வராஹ அவதாரம் எடுத்தார். அப்படியெனில் இவளது முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளுங்கள்,”என்று பாராட்டினர். நீளாதேவியின் தோழிகள்,””எங்கள் நீளாதேவி தண்ணீர் தேவதையாக இருக்கிறாள். தண்ணீரை “நாரம்’ என்பர். இதனால் தான் பெருமாளுக்கு “நாராயணன்’ என்ற சிறப்பு திருநாமமே ஏற்பட்டது. உலகிலுள்ள எல்லாரும் உச்சரிக்கும் நாமம் நாராயண நாமம். தண்ணீரைப் பாலாக்கி அதில் ஆதிசேஷனை மிதக்கச்செய்து, தாங்குபவள் எங்கள் நீளாதேவி. எனவே இவளே உயர்ந்தவள்,” என்றனர். விவாதம் வளர்ந்ததே தவிர முடிந்தபாடில்லை. எனவே ஸ்ரீதேவி வைகுண்டத்தை விட்டு புறப்பட்டு, தானே சிறந்தவள் என்பதை நிரூபிக்க தங்காலமலை என்னும் திருத்தங்கலுக்கு வந்து செங்கமல நாச்சியார் என்ற பெயரில் கடும் தவம் புரிந்தாள். இவளது தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள், இவளுக்கு காட்சி கொடுத்து இவளே சிறந்தவள் என்று ஏற்றுக் கொண்டார். திருமகள் தங்கியதால் இத்தலம் “திருத்தங்கல்’ என்ற பெயர் ஏற்பட்டது.
நம்பிக்கைகள்
இங்குள்ள தாயாருக்கு தினமும் திருமஞ்சனமும் பெருமாளுக்குத் தைலக்காப்பும் சாத்தப்படுகிறது. நீண்ட நாள்களாகத் திருமணமாகாதவர்கள் இங்கு வந்து பெருமாளை வணங்கினால், திருமணத் தடை நீங்கும் என்பது நம்பிக்கை. செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அம்மனுக்குப் பட்டு சாத்தி, வழிபட்டால் வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து பிரச்னைகளும் முடிவுக்கு வரும். இந்தக் கோயிலில் வைகாநஸ ஆகமப்படியே பூஜைகள் நடக்கின்றன. இங்கு வைகுண்ட ஏகாதசி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதம் முழுவதும், பெண்கள் இந்தத் திருத்தலத்துக்கு வந்து, வழிபாடு செய்கின்றனர்.
சிறப்பு அம்சங்கள்
ஸ்ரீரங்கம், அழகர்கோவிலைப்போல் இங்கும் சோமசந்திர விமானத்தின் கீழ் இத்தல பெருமாள் அருள்பாலிக்கிறார். அனுமன், சக்கரத்தாழ்வார் தனித்தனி சன்னதிகளில் அருளுகின்றனர். அருணன், மார்க்கண்டேயர், பிருகு மகரிஷி ஆகியோர் மூலஸ்தானத்தில் உள்ளனர். இத்தலம் அமைந்துள்ள மலையிலேயே சிவன், முருகனுக்கும் கோயில்கள் உள்ளன. பெருமாளின் மூலஸ்தானத்தில் நான்கு தாயார்கள் உள்ளனர். அன்னநாயகி(ஸ்ரீதேவி), அம்ருதநாயகி(பூமாதேவி), அனந்தநாயகி(நீளாதேவி), ஜாம்பவதி. இவர்களில் ஜாம்பவதியை இத்தலத்தில் தான் பெருமாள் திருமணம் செய்து கொண்டாராம். இத்தலத்தில், தாயார் நின்ற கோலத்தில் மிக உயரமாக காட்சி தருகிறார். தாயாருக்கு தினமும் திருமஞ்சனமும், பெருமாளுக்கு விசேஷ நாட்களில் தைலக்காப்பும் சாத்தப்படுகிறது. ஆழ்வார்கள் இத்தல பெருமாளை திருத்தங்காலப்பன் என்ற பெயரில் தான் மங்களாசாசனம் செய்துள்ளார்கள். பெருமாளின் 108 திவ்ய தேசத்தில் 48வது தலம். பாண்டி நாட்டு திவ்ய தேசத்தில் 5வது தலம். இத்தலம் குறித்து சிலப்பதிகாரத்தில் வாத்திகன் கதையில் செய்தி இருக்கிறது. 1
திருவிழாக்கள்
வைகுண்ட ஏகாதசி
காலம்
1000 -2000ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருத்தங்கல்
அருகிலுள்ள இரயில் நிலையம்
விருதுநகர்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை