திம்மக்குடி காசி விஸ்வநாதர் சிவன்கோயில், தஞ்சாவூர்

முகவரி :
திம்மக்குடி காசி விஸ்வநாதர் சிவன்கோயில்,
திம்மக்குடி, கும்பகோணம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம்.
இறைவன்:
காசி விஸ்வநாதர்
இறைவி:
விசாலாட்சி
அறிமுகம்:
கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலை செல்லும் சாலையில் தஞ்சை புறவழி சாலையை தாண்டியதும் அடுத்த ஒரு கிமீ தூரத்தில் உள்ளது இந்த திம்மக்குடி. பிரதான சாலையில் இருந்து சற்று உள்ளடங்கி உள்ளது ஊர் அனைவருக்கும் புரியும்படி சொல்லவேண்டுமானால் உலகின் மிகபெரிய 23 அடி நடராஜர் உருவாக்கப்பட்டது இந்த ஊர் தான். நாம் காணசெல்லும் சிவன் கோயில் இருப்பதும் இந்த பட்டறை இருக்கும் தெருவில் தான். இந்த பகுதியோட பேர் திம்மக்குடி.
திம்மம் அப்படினா இரும்பு. சோழர்கள் காலத்தில் அவர்களுக்காக இரும்பினால் ஆன ஆயுதங்களை செய்து கொடுத்த திம்மர்கள் வாழ்ந்த இடமாதலால் திம்மக்குடி ஆனது. சோழர்களுக்கு பின் மராட்டிய சரபோஜி மன்னர்களின் ஆட்சி வந்தது. சோழர்களுக்கு ஆயுதம் செய்த திம்மர்கள், வேறு யாருக்கும் ஆயுதம் செய்து கொடுக்க விரும்பவில்லையாம்.
பெரிய குளம் ஒன்றை வடபுறம் கொண்டுள்ளது திருக்கோயில், சுற்று மதில் சுற்றுடன், வாழை தென்னை துளசி மற்றும் பல வண்ண பூக்கள் கொண்ட நந்தவனம் அமைந்துள்ளது. மேற்கு நோக்கிய சிவன்கோயில், தெரு தென்புறம் செல்வதால் பிரதான வாயில் தெற்கில் உள்ளது, ஒரு பழமையான நந்தி தென் வாயிலில் உள்ளது. மேற்கு நோக்கிய கருவறையில் இறைவன் உள்ளார், அவரது வாயிலில் ஒரு புறம் பெரிய விநாயகரும் ஒருபுறம் முருகனும் உள்ளனர். நேர் எதிரில் பழமையான நந்தி உள்ளது ஒருபுறம் நாகர் சுவரை ஒட்டியபடி உள்ளார்.
பிரகாரம் சுற்றி வரும்போது வடகிழக்கு பகுதியில் நவகிரகங்களும், சண்டேசர் சன்னதியும் உள்ளனர். கருவறை கோட்டங்கள் என துர்க்கை, லிங்கோத்பவர் தக்ஷ்ணமூர்த்தி உள்ளனர். சிதைவடைந்த பழமையான சோழர் கோயிலின் மூர்த்திகள் சிலவற்றுடன் புதிய மூர்த்திகளை கொண்டு கோயில் பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. இறைவன் காசி விஸ்வநாதர் விசாலாட்சி என என எழுதப்பட்டுள்ளது, இது சரியா என தெரியவில்லை; இது சோழர் கோயில் என்பதால் கைலாசநாதர் எனப்பெயர் இருந்து மறைந்திருக்கலாம்.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”









காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திம்மக்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
கும்பகோணம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி