தாதாபுரம் ஸ்ரீ மாணிக்க ஈஸ்வரர் (மணிகேஸ்வரம்) கோயில், விழுப்புரம்

முகவரி
தாதாபுரம் ஸ்ரீ மாணிக்க ஈஸ்வரர் (மணிகேஸ்வரம்) கோயில், தாதாபுரம், திண்டிவனம் தெஹ்ஸில், விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு 604207
இறைவன்
இறைவன்: மாணிக்க ஈஸ்வரர் இறைவி: மாணிக்கவல்லி (காமாட்சி அம்மன்)
அறிமுகம்
தாதாபுரம் மாணிக்கஈஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், தாதாபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். திண்டிவனத்திலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது தாதாபுரம். இக்கோயில் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. மேலும் இக்கோயில் இராஜராஜ சோழன் காலத்தில் (கி.பி 1004) கட்டப்பட்ட கோயில். இராஜராஜசோழனின் தமக்கையான குந்தவை நாச்சியாரால் தனது சகோதரனான ஆதித்த கரிகாலச்சோழனின் நினைவாக ரவிகுல மாணிக்க ஈஸ்வரம் என்ற பெயரில் இக்கோயிலை எடுப்பித்தார் .. குந்தவை நாச்சியார் தனது திருவுருவ சிலையையும் இக்கோயிலில் இடம்பெற செய்துள்ளார்.. இதற்கான சான்று இக்கோயின் தெற்கே உள்ள தேவா கோட்ட மாடத்து அருகே அழகிய மங்கை ஒருவரின் உருவச்சிலை உள்ளது .இது குந்தவை நாச்சியாரின் சிலை ஆகும் . இந்தத் திருக்கோயில் 1,000 ஆண்டுக்கால பழைமை வாய்ந்தது. இந்தத் தலத்தின் தற்போதைய பெயர் ‘தாதாபுரம்’ என்று வழங்கப்பட்டாலும் இதன் வரலாற்றுக் காலப் பெயர் ‘ராஜராஜபுரம்’ என்பதாகும். இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலில் ஒருகாலப் பூஜை நடக்கின்றது.
புராண முக்கியத்துவம்
கிழக்கு நோக்கிய இந்த ஆலயம் கருவறை, அர்த்த மண்டபம், இடைநாழி, மகா மண்டபம், முகமார்பு எனும் வடிவமைப்பில் உள்ளது. கருவறையையும் அர்த்த மண்டபத் தையும் இணைக்கும் இடைநாழியில் காணப்படும் துவாரபாலகர்கள் உடல்களில் யானையை விழுங்கும் பாம்புகள் (ஆனைகொண்டான்) வியக்கும்வண்ணம் எழிலுற அமைக்கப்பட்டுள்ளன. இத்தலத்து ஈசன், ராஜராஜனின் பெயரான ‘ரவிகுல மாணிக்கம்’ என்னும் பெயர்கொண்டு ‘ரவிகுல மாணிக்க ஈஸ்வரர்’ என்றே அழைக்கப்படுகிறார். இத்தலத்து அம்பிகை மாணிக்கவல்லி, காமாட்சி அம்மன் என்னும் திருநாமங்களோடு அருள்பாலிக்கிறாள். பிராகாரத்தில் நடன கணபதி, தட்சிணாமூர்த்தி, திருமால், துர்கை, நான்முகன், பைரவர், முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர், சூரியபகவான், காளிங்கநாதர், நவகிரகங்கள் ஆகியோர் அருள்புரிகின்றனர்.
நம்பிக்கைகள்
மூலவரான லிங்கத்திருமேனியின் மீது பிரம்ம சூத்திரக்கோடுகள் காணப்படுகின்றன. ஆகவே, இந்தத் தல இறைவனை வணங்கி வழிபட்டால் சகல ஞானங்களும் ஸித்திக்கும் என்பது ஐதிகம். இந்தத் தலத்தில் நடைபெறும் ஆடிப்பூர வளைகாப்பில் கலந்துகொண்டால், குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தாதாபுரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திண்டிவனம்
அருகிலுள்ள விமான நிலையம்
புதுச்சேரி