தக்காளி காணிக்கை!

காரைக்குடி நகரின் அருகே உள்ள முத்துப்பட்டினம் எனும் பகுதியில் கோயில் கொண்டிருக்கிறாள் முத்து மாரியம்மன். சமயபுரத்திலிருந்து இங்குவந்து பல சித்து விளையாடல்கள் புரிந்த சிறுமி ஒருத்தியின் நினைவாக இந்தக் கோயில் அமைந்ததாகச் சொல்கிறார்கள். அந்தச் சிறுமியின் வேண்டுகோளின்படி இந்த ஆலயத்தில் அம்மனுக்குத் தக்காளிப் பழமே காணிக்கையாகத் தரப்படுகிறது. மேலும், அம்மனுக்குத் தக்காளி பழச்சாறால் அபிஷேகம் நடத்தப்படுவதும் இக்கோயிலின் சிறப்பம்சம் ஆகும்
