செல்லூர்-பேட்டை அமிர்தகடேஸ்வரர் சிவன்கோயில், காரைக்கால்

முகவரி :
செல்லூர்-பேட்டை அமிர்தகடேஸ்வரர் சிவன்கோயில்,
செல்லூர்-பேட்டை, திருநள்ளாறு கொம்யூன்,
காரைக்கால் மாவட்டம் – 609601.
இறைவன்:
அமிர்தகடேஸ்வரர்
இறைவி:
அபிராமி
அறிமுகம்:
திருநள்ளாரின் மேற்கில் செல்லும் அம்பகரத்தூர் சாலையில் இரண்டு கிமீ தூரத்தில் உள்ள செல்லூருக்கு சற்றுமுன்னதாக அகலங்கண் சாலை செல்கிறது அதில் சிறிது தூரம் சென்றால் ஒரு பெரிய தொழிற்சாலையை ஒட்டிய இடத்தில் தனித்த லிங்கம் ஒன்றுக்கு கூரையமைத்து உடன் அம்பிகையையும் வைத்துள்ளனர். இறைவன் மேற்கு நோக்கி அமர்ந்துள்ளார், அவரது எதிரில் நந்தி பலிபீடம் உள்ளது, வாயிலில் வலம்புரி கணபதி, பாலமுருகன் உள்ளனர். இறைவன் – அமிர்தகடேஸ்வரர் இறைவி – அபிராமி கருவறை சுவர்கள் வண்ண ஓவியங்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. எளிமையாக அழகாக உள்ளது திருக்கோயில்.








காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
செல்லூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
காரைக்கால்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி
Location on Map
