Thursday Dec 26, 2024

சுகு சிவன் கோவில், இந்தோனேசியா

முகவரி

சுகு சிவன் கோவில், தம்பக், பெர்ஜோ, கெக். நர்கோயோசோ, கபுபதேன் கரங்கன்யர், ஜாவா தெங்கா 57793, இந்தோனேசியா

இறைவன்

இறைவன்: சிவன்

அறிமுகம்

சுகு கோயில் மத்திய மற்றும் கிழக்கு ஜாவா மாகாணங்களுக்கு இடையிலான எல்லையில் அமைந்துள்ள ஒரு ஜாவானிய – இந்து மதக் கோயிலாகும். இது 15 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. இது லாவு மலையின் மேற்குச் சரிவில் பகுதியில் 910 மீட்டர்கள் (2,990 ft) உயரத்தில் அமைந்துள்ளது. சுகு கோயிலில் பிற கோயில்களிலிருந்து மாறுபட்ட, ஒரு தனித்துவமான கருப்பொருளைக் கொண்ட புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் பிறப்பதற்கு முந்தைய வாழ்க்கை உள்ளிட்டவை முக்கிய கருப்பொருள்களாக உள்ளன. அதன் முக்கியமான அமைப்பு ஒரு எளிய பிரமிடு வடிவத்தைப் போன்ற நிலையில் அமைந்துள்ளது. அதற்கு முன்னால் புடைப்புச் சிற்பங்கள், மற்றும் சிலைகள் உள்ளன.

புராண முக்கியத்துவம்

சுகு கோயில்15 ஆம் நூற்றாண்டில் லாவு மலையின் வடமேற்கு சரிவுகளில் கட்டப்பட்ட பல கோயில்களில் சுகு ஒன்றாகும். அந்தக் காலகட்டத்தில் ஜாவானிய மதமும் கலையும் இந்திய நெறியுரைகளைக் கொண்ட பரந்த நிலையில் இருந்தன. அவற்றை 8 முதல் 10 ஆம் நூற்றாண்டுகளில் இருந்த கோயில் பாணிகள் மூலம் காண முடியும். ஜாவாவில் கோயில் கட்டுமான நிலையின் முக்கியத்துவம் பெற்ற இறுதி நிலையாகக் கூறலாம். இது 16ஆம் நூற்றாண்டில் இந்தத் தீவில் நீதிமன்றங்கள் இஸ்லாமிற்கு மாற்றப்படுவதற்கு முன்னர் இருந்த சூழலாகும். கோயிலின் தனித்துவம் மற்றும் ஜாவானிய விழாக்கள் மற்றும் சகாப்தத்தின் நம்பிக்கைகள் பற்றிய ஆவணப் பதிவுகள் இல்லாததால் இந்த பழங்காலங்களின் முக்கியத்துவத்தை வரலாற்றாசிரியர்கள் விளக்குவது சிரமமாக உள்ளது. 1815 ஆம் ஆண்டில், 1811 – 1816 ஆம் ஆண்டுகளில் ஜாவாவின் ஆட்சியாளராக இருந்த சர் தாமஸ் ராஃபிள்ஸ் கோயிலுக்குச் சென்றார். அது மோசமான நிலையில் இருப்பதைக் கண்டார். அவர் அப்போது பல சிலைகள் தரையில் வீசப்பட்ட நிலையில் இருந்தது என்றும், சில சிலைகள் தலையின்றி இருந்தன என்றும் கூறுகிறார். மாபெரும் லிங்கா சிலையை இரண்டு துண்டுகளாக உடைத்திருப்பதை ராஃபிள்ஸ் கண்டறிந்தார், பின்னர் அவை ஒன்றாக ஒட்டப்பட்டன. பாரம்பரிய பண்பாட்டின் மீதான இத்தகைய காழ்ப்புணர்வு 16 ஆம் நூற்றாண்டில் ஜாவா மீதான இஸ்லாமிய படையெடுப்பின் விளைவாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம்

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பெர்ஜோ

அருகிலுள்ள இரயில் நிலையம்

ஜகார்த்தா

அருகிலுள்ள விமான நிலையம்

ஜகார்த்தா

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top