சித்தாநல்லூர் ஏகாம்பரேஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி :
சித்தாநல்லூர் ஏகாம்பரேஸ்வரர் சிவன்கோயில்,
சித்தாநல்லூர், திருவாரூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 611105.
இறைவன்:
ஏகாம்பரேஸ்வரர்
இறைவி:
காமாட்சி
அறிமுகம்:
அத்திப்புலியூர் திருவாரூர் – கீழ்வேளூர் சாலையில் 8-கிமீ தூரத்தில் உள்ளது. அத்திபுலியூரின் தென்புறம் செல்லும் தொடர்வண்டிப்பாதையினை ஒட்டியவாறு இரு கோயில்களும் உள்ளன. இப்பகுதி தற்போது சித்தாநல்லூரில் உள்ளது. அத்திபுலியூரில் இருந்து சித்தாநல்லூர் செல்லும் சாலையில் ஒரு பெரிய குளத்தின் எதிரில் சிறிய வழிப்பாதை மூலம் ரயில் பாதையை தாண்டித்தான் சிவன்கோயிலுக்கு செல்லமுடியும். சரியான பாதை இல்லாமையாலும், சிவவழிபாடு செய்யம் மக்கள் அருகாமை நகரங்களுக்கு குடிபெயர்ந்ததாலும் சரியான பூஜையின்றி பராமரிப்பின்றி கோயில் சிதைவடைய தொடங்கியது, போதாக்குறைக்கு அருகாமை ரயில் பாதையில் செல்லும் நவீன கால ரயில்கள் பெரும் அதிர்வை தருகின்றன. இதனால் செங்கல் கொண்டு கட்டப்பட்ட கோயில் கட்டுமானம் பெரும் அதிர்வை நித்தம் நித்தம் சந்திக்கின்றது. மதில் சுவர்கள் மரங்கள் வளர்ந்து பெருத்ததால் சாயத்தொடங்கிவிட்டன. கருவறை இடுக்குகளில் மரங்கள் வளர்ந்து பெரும் சேதம் ஏற்படுத்தி வருகின்றது.
இறைவன் ஏகாம்பரேஸ்வரர் கிழக்கு நோக்கியும் இறைவி காமாட்சி தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கிறார்கள். சிறிய இணைப்பு மண்டபம் திறந்தவெளி முகப்பு மண்டபம் என உள்ளது. கருவறை கோட்டத்தில் தென்முகன் மட்டுமே உள்ளார். விநாயகர் முருகன் சண்டேசர் மூவருக்கும் சிறிய பெட்டி போன்ற மாடங்கள் கட்டப்பட்டுள்ளது. வடகிழக்கில் சனைச்சரன், பைரவர் இருவரும் இதே போன்ற கட்டுமானமே உள்ளது. வடக்கில் தீர்த்தம் எடுக்க கிணறு ஒன்றுள்ளது. வெளியில் இருந்து பார்க்க கோயில் பெரியதாக தோன்றினாலும் உள்ளுக்குள் பல பிரச்சனைகளை கொடுள்ளது. ஒரே ஆறுதல் தரும் விஷயம் இங்கு ஆத்மார்த்தமாக பூஜை செய்யும் சிவாச்சாரியார். திரு.ஸ்ரீதர் குருக்கள் (9600530135) பல வெளிநாட்டு வாய்ப்புகள் வந்தபோதிலும் செல்லாமல் “என் கடன் பணி செய்து கிடப்பதே” என இக்கோயில் மட்டுமல்லாது, இதே நிலையில் உள்ள மணலூர், காக்கழனி போன்ற வேறு சில சிவன் கோயில்களையும் ஒருகால பூஜை செய்து வருகிறார்.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”












காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சித்தாநல்லூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி