கொம்யூன் புதுத்துறை சோமசுந்தரேஸ்வரர் சிவன்கோயில், காரைக்கால்

முகவரி :
கொம்யூன் புதுத்துறை சோமசுந்தரேஸ்வரர் சிவன்கோயில்,
கொம்யூன் புதுத்துறை, காரைக்கால் மாவட்டம் ,
புதுச்சேரி மாநிலம் – 609607.
இறைவன்:
சோமசுந்தரேஸ்வரர்
இறைவி:
அங்கயற்கண்ணி
அறிமுகம்:
காரைக்கால்- திருநள்ளாறு சாலையில் இருந்து தருமபுரம் செல்லும் சிறிய சாலை பிரிகிறது. அந்த சிறிய சாலையில் பாடல் பெற்ற தருமபுரம் யாழ்முரிநாதர் கோயில் உள்ளது. இதன் தெற்கில் அரசலாற்றை நோக்கி செல்லும் சாலையில் அரை கிமீ தூரத்தில் உள்ளது புதுத்துறை. இங்குள்ள முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் தெருவின் மேற்கில் உள்ளது ஒரு பிள்ளையார் கோயில், அங்கிருந்து வளைந்து நெளிந்து ஒரு கிமீ தூரம் செல்லும் செம்மண் சாலை உங்களை புதுத்துறை சிவன் கோயிலுக்கு அழைத்து செல்லும். ஆங்காங்கே தெரு திருப்பங்களில் சிறிய போர்டு உள்ளதுகண்டு மகிழ்ச்சி. பல காலம் மரத்தடியில் இருந்த ஒரு லிங்க மூர்த்தி தான் இந்த சோமசுந்தரேஸ்வரர் தற்போது கிழக்கு நோக்கிய கருவறை கொண்டு அருள்பாலிக்கிறார். உடன் அங்கயற்கண்ணி தெற்கு நோக்கி உள்ளார். கருவறை வாயிலில் விநாயகர் முருகன், அருகில் தட்சணாமூர்த்தி பைரவர், சனிபகவான் வீரன் சன்னதிகளும் உள்ளன. சிறிய கோயில் தான் என்றாலும் கீர்த்தி பெரியது.









காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கொம்யூன் புதுத்துறை
அருகிலுள்ள இரயில் நிலையம்
காரைக்கால்
அருகிலுள்ள விமான நிலையம்
புதுச்சேரி