Saturday Sep 21, 2024

குரோம்பேட்டை குமரன் குன்றம் முருகன் கோயில்- சென்னை

முகவரி

குமரன் குன்றம் முருகன் கோயில் அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில், குமரன்குன்றம், குரோம்பேட்டை, சென்னை- 600 044. PH +91 – 44 – 2223 5319, 93805 10587

இறைவன்

இறைவன்: பாலசுப்பிரமணியர்

அறிமுகம்

குமரன் குன்றம் முருகன் கோயில் என்பது காஞ்சிபுரம் மாவட்டத்தில் குரேம்பேட்டைக்கு அருகே உள்ள முருகன் ஆலயம் ஆகும். இந்த ஆலயத்தின் மூலவர் சுவாமிநாதசுவாமி(பாலசுப்ரமணியர்). மூலஸ்தானத்தில் சுவாமிநாதர், கையில் தண்டம் வைத்து பால வடிவில் காட்சி தருகிறார். இவரது பீடத்திலும், சன்னதி எதிரிலும் யானை வாகனம் இருக்கிறது. உற்சவர் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். ஆடி தைகிருத்திகை, திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் சுவாமிமலையை கிரிவலம் வருகிறார்.

புராண முக்கியத்துவம்

பல்லாண்டுகளுக்கு முன்பு இத்தலத்தில் குன்று மட்டும் இருந்தது. ஒருசமயம் இவ்வூருக்கு வந்த காஞ்சிப்பெரியவர், இம்மலையைப் பார்த்து பிற்காலத்தில் இங்கு முருகன் கோயில் உண்டாகும் எனச் சொல்லிச்சென்றுவிட்டார். சிலகாலம் கழித்து பக்தர்கள் சிலர், இம்மலையை சீர்படுத்தினர். அப்போது குன்றில் ஒரு வேல் கிடைத்தது. அதை இங்கேயே பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். பின்பு முருகனுக்கு தனிக்கோயில் கட்டப்பட்டது. மூலவருக்கு சுவாமிநாதன் என்று பெயர் சூட்டப்பட்டது.

நம்பிக்கைகள்

திருமண, புத்திர தோஷம் நீங்க இத்தல முருகனிடம் வேண்டிக் கொள்கிறார்கள். இங்குள்ள முருகன் வடக்கு திசை நோக்கியிருப்பதால், குடும்பத்தில் ஐஸ்வர்யர்ம் உண்டாக இவருக்கு மங்கலப்பொருட்கட்ள் படைத்துத் வேண்டிக்கொள்கிறார்கள். எனவே இவரை பக்தர்கள், “ஐஸ்வர்யர் முருகன்’ என்றும் அழைக்கிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்

குமரனாகிய முருகன் குடியிருக்கும் குன்றம் என்பதால் தலம் “குமரன் குன்றம்” என்று அழைக்கப்படுகிறது. சித்திரை மாதப் பிறப்பின்போது இங்குள்ள 120 படிகளுக்கு விசேஷ பூஜை நடக்கிறது. அன்று சுவாமி ஊஞ்சலில் எழுந்தருளுவார்.

திருவிழாக்கள்

வைகுண்ட ஏகாதசி, கார்த்திகை (நவம்பர்-டிசம்பர்).

காலம்

500 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

குரோம்பெட்

அருகிலுள்ள இரயில் நிலையம்

குரோம்பெட்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top