கீழப்படுகை திரவுபதியம்மன் திருக்கோயில், திருவாரூர்
முகவரி
அருள்மிகு திரவுபதியம்மன் திருக்கோயில், கீழப்படுகை அஞ்சல், கீழப்படுகை, திருவாரூர் மாவட்டம் – 610109 போன்: +91 97862 04428
இறைவன்
இறைவி: திரவுபதியம்மன்
அறிமுகம்
திரௌபதி அம்மன் கோயில் தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கீழப்படுகை கிராமத்தில் அமைந்துள்ள கோயிலாகும். அதிபதி திரௌபதி அம்மன். ஊற்சவர் திரௌபதி & அர்ஜுனன். ஸ்தல விருட்சம் என்பது வேம்பு மரம். தீர்த்தம் என்பது அம்மன் தீர்த்தம்.
புராண முக்கியத்துவம்
பெருங்குடி கிராமத்தில் உள்ள மகாமாரியம்மன் கோயில் துவங்கிய காலத்தில் இக்கோயிலும் அமைக்கப்பட்டுள்ளது. எல்லை காவல் தெய்வாக அமைத்துள்ளனர். மன்னர் காலத்தில் மரத்தூண்கள் அமைத்து மேற்கூரையாக ஓடு வேய்ந்தனர். அப்பகுதியினர் செல்வ செழிப்பிற்கும் பாதுகாப்பிற்கும் வணங்கினர். அதனைத்தொடர்ந்து குலதெய்வவழிபாடும் நடத்தி வந்தனர். மன்னர் காலத்தில் ஐம்பொன் விக்கிரங்கள் உற்சவர்கள் காணிக்கையாக செலுத்தினர். காலப்போக்கில் கட்டடம் பழுதடைந்து கிடந்தது. அப்பகுதி இளைஞர்கள் முன் வந்து வசூல் செய்து கோயில் கட்டியுள்ளனர். கோயில் இருக்கும் இடத்தில் அப்பகுதியினர்கள் பயன்பெறும் வகையில் திருமண மண்டபம் கட்டியுள்ளனர்.
நம்பிக்கைகள்
திருமணத்தடை, புத்திரபாக்கியம், கடன் தீரவும், நோய் நிவர்த்திக்கும், விவசாயம் செழிப்படைய பிரார்த்தனை செய்யப்படுகிறது.
சிறப்பு அம்சங்கள்
கிழக்குப்பக்கம் நுழைவு வாயிலில், எதிரில் மிகப் பெரிய அரசமரம், மகாமண்டபத்தில் 200 பேர் அமர்ந்து தரிசனம் செய்யும் வசதி, வழுவழுப்பான தரை தலம், பலி பீடம் மற்றும் கொடி மரம் உள்ளது. சனி மூலையில் 23 கிலோ எடையில் கோயில் மணி, இடது பக்கம் செல்வ விநாயகர், வலது பக்கம் வீரபத்திரன் விக்கிரங்களும், உள்ளே மூலவரான திரவுபதியம்மன் கிழக்குப்பக்கம் பார்த்த வகையில் அருள்பாலிக்கிறார். 500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோயில். 2014-ம் ஆண்டு பிப்ரவரியில் கும்பாபிஷேகம் நடந்தது. திரவுபதியம்மன், அர்ச்சுனன் ஆகிய உற்சவ சிலைகள் பாதுகாப்பு கருதி தியாகராஜர் கோயிலில் வைக்கப்பட்டுள்ளது.
திருவிழாக்கள்
பங்குனியில் தீமிதி உற்சவம், ஆடி, தை வெள்ளி, பவுர்ணமி வழிபாடு போன்ற விழாக்கள் சிறப்புமிக்கதாக கொண்டாடப்படுகிறது.
காலம்
500 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
புலிவலம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி