கழுவத்தூர் ஜடாயுபுரீஸ்வரர் கோயில், திருவாரூர்

முகவரி :
கழுவத்தூர் ஜடாயுபுரீஸ்வரர் கோயில்,
கழுவத்தூர், மன்னார்குடி வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 614705.
இறைவன்:
ஜடாயுபுரீஸ்வரர்
இறைவி:
செளந்திர நாயகி
அறிமுகம்:
மன்னார்குடியில் இருந்து பெருகவாழ்ந்தான் செல்லும் வழியில் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, கழுகத்தூர். மன்னார்குடி முத்துப்பேட்டை ரோட்டில் 20 கிமீ தூரத்தில் கழுவத்தூர். இங்கு சவுந்தரநாயகி உடனாய ஜடாயுபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் பிரகாரத்தில் 12 ராசிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட ராஜ சிம்மாசனத்தில் தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். இங்கு ஒரு ராசியைக் கூறி அர்ச்சனை செய்தால், 12 ராசிகளுக்கும் அர்ச்சனை செய்த பலன் கிடைக்கும்.
இந்தக் கோயில் குறித்து கல்வெட்டு ஆய்வாளர் கூறுவதாவது. 11 நூற்றாண்டில் சோழ மன்னர்களால் கட்டப்பட்ட கற்கோயில் இது: சோழ மண்டலத்து அருமொஃஸி தேவ வள நாட்டு புறங்கறம்பை நாட்டுக் கெழுவத்தூர் என ராஜராஜசோழனின் கல்வெட்டில் இந்த ஊரின் பெயர் உள்ளது. அம்பாளின் பெயர் செளந்திர நாயகி. கோயில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் ஆகி விட்டதாம். முழுமையாக சிதிலமடைந்த கோவிலை புதுப்பித்துள்ளனர்.
வேலைப்பாடு மிக்க கருங்கல் நந்தி மண்டபம் இங்குள்ளது. இங்குள்ள நர்த்தன வினாயகர் மான் மழு ஏந்திய அதிகார நந்தி அவரது மனைவி சயஸ் சிறகுகளுடன் மனித வடிவிலுள்ள ஜடாயு சிற்பங்கள் சிறப்பானவை. கருவறையில் தெற்கில் தட்சிணா மூர்த்தி வீற்றிருக்கிறார். இவர் அமர்ந்துள்ள பாறையின் கீழ் பாம்பு புலி சிங்கம் பறவைகள் படுத்த நிலையில் காளை இருப்பது வித்தியாசமானது.






காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கழுவத்தூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மன்னார்குடி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி