ஓரத்தூர் அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி :
ஓரத்தூர் அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில்,
ஓரத்தூர், நாகை வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 611102.
இறைவன்:
அக்னிபுரீஸ்வரர்
இறைவி:
திரிபுரசுந்தரி
அறிமுகம்:
நாகப்பட்டினத்தின் மேற்கில் உள்ள நாலுரோட்டில் இருந்தது வேளாங்கண்ணி சாலையில் 11 கிமீ சென்றால் பரவை கிராமம், இதன் மேற்கில் நாகை மருத்துவக்கல்லூரி செல்லும் சாலையில் ஐந்து கிமீ தூரம் சென்றால் மருத்துவக்கல்லூரியின் பின்புறம் உள்ளது இந்த சிவன் கோயில். இப்பகுதி ஓரத்தூர் கிராமத்தை சேர்ந்தது. இக்கோயிலையும் சேர்த்து இரு சிவன் கோயில்கள் உள்ளன எனலாம். இக்கோயிலை ஒட்டி ஓடும் கடுவையாறு இப்பகுதியில் உத்திரவாகினியாக வடக்கு நோக்கி திரும்புகிறது. நண்பர் ஒருவரின் தகவல் படி ஊரின் அக்னிமூலையில் இருப்பதால் இறைவன் அக்னிபுரீஸ்வரர் எனப்படுகிறார். இறைவி திரிபுரசுந்தரி ஆவார். மற்றொரு கோயில் இறைவன் அகத்தீஸ்வரர் ஆவர். இங்கு பழமையான சிவன்கோயில் ஒன்றிருந்து சிதைவுற்றது என சொல்கின்றனர், தற்போது இவ்வூரின் அடையாளமாக நாகை மருத்துவக்கல்லூரி + மருத்துவமனை அமைகிறது.
கோயில் மேற்கு நோக்கி இந்த மருத்துவமனையை பார்த்தவாறு கட்டப்பட்டு வருகிறது. முற்றிலும் கருங்கல் கொண்டு அழகாக பணிகள் நடைபெறுகின்றது, தற்போது பணிகள் தொய்வடைந்து நிறுத்தப்பட்டு உள்ளது, மேற்கு நோக்கிய கருவறை கொண்டு இறைவன் அக்னிபுரீஸ்வரர் அமைய உள்ளார், தெற்கு நோக்கியபடி இறைவி கருவறை தயாராகிறது, இறைவியின் சிலையும் தயாராகவேண்டி உள்ளது. விரைவில் குடமுழுக்கு நடக்க பிரார்த்திப்போம். விரைவில் இங்கு வரும் நோயாளிகளின் இஷ்ட தெய்வம் ஆகப்போகிறார் என்பது மகிழ்ச்சி.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”






காலம்
1500 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஓரத்தூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி