Thursday Sep 19, 2024

எதிர்க்கோட்டை ஸ்ரீ வேணுகோபாலன் சுவாமி திருக்கோயில், விருதுநகர்

முகவரி :

எதிர்க்கோட்டை ஸ்ரீ வேணுகோபாலன் சுவாமி திருக்கோயில்,

எதிர்க்கோட்டை, சாத்தூர் வட்டம்,

விருதுநகர் மாவட்டம் – 626131.

இறைவன்:

ஸ்ரீ வேணுகோபாலன் சுவாமி

இறைவி:

ஸ்ரீசத்யபாமா-ஸ்ரீருக்மணி

அறிமுகம்:

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டத்தில் உள்ளது எதிர்க்கோட்டை. இங்கு ஸ்ரீசத்யபாமா-ஸ்ரீருக்மணியுடன் கோவில் கொண்டிருக்கிறார் ஸ்ரீ வேணுகோபாலன் சுவாமி. ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அருகே அன்னை போற்றி வழிபட்ட ஊர்களில் இதுவும் ஒன்று. மற்ற நான்கு அம்மையார்பட்டி, அனுப்பங்குளம், விழுப்பனூர், நதிகுடி. ஆற்றின் மேற்கு கரையில் இருந்த கல்லமநாயக்கன்பட்டி மற்றும் வெள்ளை மடத்துபட்டி எதிரே கோட்டையுடன் அமைந்ததால் இந்த ஊருக்கு எதிர்க்கோட்டை என்று பெயர்.

புராண முக்கியத்துவம் :

 சுமார் 300 வருடங்களுக்கு முன்பே இந்த பகுதியை ஆட்சி செய்த சிற்றரசர் கோவிந்தப்ப நாயக்கர். இவர் காஞ்சி மற்றும் திருவள்ளூர் திவ்ய தேசங்களில் வாழ்ந்த வேதநூல் ஒப்பந்தங்களும் கற்றுத் தேர்ந்த அந்தணர்களை குடியேற்றி இந்த ஊரையும் கோயிலையும் கோட்டையையும் அமைத்தவர். மண்டூக மகரிஷியால் தோற்றுவிக்கப்பட்ட மீன்கள் நிறைந்த கயல் ஆற்றின் கிழக்கு கரையில் அழகுற அமைந்தன கோயிலும்.

இந்த ஊர் மக்களுக்கு தலைவராக இருந்த வீரராகவய்யங்கார் வேத சாஸ்திரங்களில் விற்பன்னர். ஒரு முறை எதிரிகள் படை எடுத்து வந்தபோது சுதர்சன மஹாமந்திரத்தை ஜெபித்து ஒரு நாணயத்தை சுண்டி விட்டாராம் வீரராகவய்யங்கார். அது ஊரை சுற்றி கோட்டை அமைந்ததாகவும் அதை தாண்டி எதிரிகளால் வர முடியவில்லை எனவும் பெரியவர்கள் கூறுகிறார்கள். இன்றும் கோயிலின் மகாமண்டபத்தில் கோவிந்தப்ப நாயக்கர் மற்றும் வீரராகவய்யங்காரின் சிலைகளை காணலாம்.

காலப்போக்கில் பஞ்சம் தலை தூக்க விவசாயத்தை நம்பி இருந்த அந்தணர்கள் வேறு ஊர்களுக்கு இடம் பெயர்ந்தன. இவ்வூர் பெரியவர்களும் தனவான்களும் கோயிலுக்கு காணிக்கையாக அளித்த நிலங்களும் சொத்துக்களும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி ஒரு கட்டத்தில் பூஜை வருமானமின்றி நித்திய பூஜைகளும் தடைபடும் நிலை ஏற்பட்டது. ஆனால் பெருமாளின் திருவருளாலும்  சிலரது முயற்சியாலும் சத்யபாமா சமேத ஸ்ரீவேணுகோபால சுவாமி பக்த சபை அமைக்கப்பட்டு பணிகள் துவங்கின. சுற்று சுவர் எழுப்பப்பட்டு, மகாமண்டபம், ஆழ்வார் ஆச்சார்யர்கள் எழுந்தருளும் மண்டபம், கருவறை ஆகியன புதுப்பொலிவு பெற்றது. முறைப்படி யாகசாலை துவங்கி கும்பாபிஷேகமும் நடைபெற்றுது.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

எதிர்க்கோட்டை

அருகிலுள்ள இரயில் நிலையம்

விருதுநகர்

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top