உக்கம்பெரும்பாக்கம் நட்சத்திர விருட்ச விநாயகர் திருக்கோயில், திருவண்ணாமலை

முகவரி :
அருள்மிகு நட்சத்திர விருட்ச விநாயகர் திருக்கோயில்,
உக்கம்பெரும்பாக்கம், கூழமந்தல் ஏரிக்கரை, செய்யாறு வட்டம்,
திருவண்ணாமலை மாவட்டம் 631701
போன்: +91 9445120996, 6382122588, 6383171284
இறைவன்:
நட்சத்திர விருட்ச விநாயகர்
அறிமுகம்:
காஞ்சிபுரம் – வந்தவாசி நெடுஞ்சாலையில் உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தின் தெற்கே கூழமந்தல் ஏரிக்கரையில் அருள்மிகு நட்சத்திர விருச்ச விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது. திருக்கோயிலில் நட்சத்திர விருட்ச விநாயகர், ருத்ராட்ச லிங்கேஸ்வரர், வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணியர், தாரை சமேத தேவகுரு என்கிற பிரகஸ்பதி, சனீஸ்வர பகவான், ராகு கேது இதைத் தவிர 27 நட்சத்திர அதிதேவதைகள் போன்ற திருக்கோயில்கள் தனித் தனியாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் திருக்கோயிலுக்கு வெளியே 27 நட்சத்திர விருட்சங்கள் மற்றும் 12 ராசி விருட்சங்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
புராண முக்கியத்துவம் :
ஸ்ரீகாஞ்சி மகா பெரியவாள் வழிகாட்டுதலின்படி முக்தியடைந்த தவத்திரு சிவானந்த சரஸ்வதி சதாசிவ சித்தர் சுவாமிகளினால் பிரதிஷ்டைசெய்யப்பட்ட நட்சத்திர அதிதேவதைகள் மற்றும் 27 விருட்சங்கள், ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெகத்குரு ஸ்ரீசங்கர விஜேந்திர சரஸ்வதி சுவாமிகளால் அத்தி ருத்ராட்சலிங்கேஸ்வரர் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிறப்புடைய திருக்கோயில் ஆகும்.
நம்பிக்கைகள்:
பலவித தோஷங்கள், திருமணதடைகள், குழந்தை பாக்கியம், வாழ்க்கையில் தொடர்ந்து ஏற்படும் தடைகள், பலவித துன்பங்கள் விலக என பல இன்னல்களிலிருந்து விடுபட பிராத்தனை செய்துக்கொள்ளலாம். அவரவருக்கு உரிய ஜென்ம நட்சத்திரம் வரும் நாளை அறிந்து அந்நட்சத்திர நாளில் நட்சத்திர அதிதேவதைகளை வழிபாடு செய்வது சிறந்த பலனை கொடுக்கும். பித்ரு தோஷம் நீங்கும். இங்கு அருள்பாலிக்கும் பித்ரு பகவானுக்கு அமாவாசை தினத்தில் அர்ச்சனை செய்துகொள்வது முன்னோர்களின் பரிபூரணஆசி கிடைக்கும்.
சிறப்பு அம்சங்கள்:
இத்திருக்கோயிலில் முழுமுதற்கடவுள், மும்மூர்த்த்திகள், என்திசை பாலகர்கள், நவகிரகங்கள், 27 நட்சத்திர அதிதேவதைகள், அத்தி ருத்ராட்சலிங்கேஸ்வரர், வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமனியர், சமேத தேவகுரு (எ) பிரகஸ்பதி, ராகுகேது, சனீஸ்வரர் என அனைத்துத் தெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர். பிரதி தினம் நடைபெறும் நித்ய பூஜை காலத்தில் காகம் பிரசாத உணவு கேட்டு பெற்று உண்ணும் அற்புத நிகழ்வு இன்றும் நடைபெறுகிறது. விநாயகரின் உத்திரவு கிடைத்தால் மட்டுமே இத்திருக்கோயிலுக்கு வரமுடியும். உலகில் வேறு எங்கும் தரிசிக்க முடியாத ஜென்ம நட்சத்திரத்திற்கே உரிய அதிதேவதை திருக்கோமில் ஜென்ம நட்சத்திர வழிபாடு செய்ய தொடங்கினாலே தீமைகள் விலகி நன்மைகள் தொடங்கும்.
திருவிழாக்கள்:
தமிழ்புத்தாண்டு, சித்ரா பௌவுர்ணமி கஜமுகா சதுர்த்தி, காணும் பொங்கல் 108 கோ பூஜை, ஆங்கிலப்புத்தாண்டு, குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி, சித்திரை பௌர்ணமி சூரன் வதம், வாரம் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகளும், சங்கடறர சதுர்த்தி, பிரதோஷ வழிபாடு.
















காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
உக்கம்பெரும்பாக்கம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவண்ணாமலை
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி