இலுப்பூர் நாகநாதசுவாமி சிவன்கோயில், திருவாரூர்

முகவரி :
இலுப்பூர் நாகநாதசுவாமி சிவன்கோயில்,
இலுப்பூர், கூத்தாநல்லூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 611105.
இறைவன்:
நாகநாதசுவாமி
இறைவி:
ஆனந்தவள்ளி
அறிமுகம்:
இவ்வூர் செருவாமணி எனும் ஊராட்சியின் கீழுள்ள ஊராகும். திருவாரூரில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும், திருவாரூர் – திருத்துறைப்பூண்டி சாலையில் நாலுரோடு வந்து அங்கிருந்து மேற்கே திருநெல்லிக்கா செல்லும் பாதையில் 5 கிமீ தூரம் செல்லவேண்டும். நெல்லிகாவின் நேர் மேற்கிலும், திருதெங்கூரின் வடக்கிலும் அமைந்துள்ளது சிறிய ஊர் தான் இங்கு கிழக்கு நோக்கிய சிறிய சிவன் கோயில் ஒன்றுள்ளது. இறைவன் நாகநாதசுவாமி, இறைவி ஆனந்தவள்ளி ஊரின் தென்புறம் தனித்து ஒரு பெரிய குளத்தின் கரையில் உள்ளது இந்த சிவன்கோயில்.
அஷ்ட நாகங்களில் ஒன்றான வாசுகி தீர்த்தகுளம் அமைத்து வழிபட்டதால் இங்கு இறைவன் நாகநாதர் என வழங்கப்படுகிறார். ராகு கேது தோஷம் உடையவர்கள் இத்தல இறைவனை வழிபட்டு தோஷங்கள் நீங்க பெறலாம். இங்கே துர்க்கை தென்புறம் நோக்கியபடி இருப்பது சிறப்பு கருவறை கோட்டங்கள் இல்லை. பைரவர் சிலை உடைந்து கிடைக்கிறது. சிறிய சூரியன் சிலை ஒன்று தன் வெயிலில் தானே காய்கிறது.
கோயில் அமைந்திருக்கும் நிலம் கடினமண் தன்மை இல்லாமையால் கோயில் சுவர்களும் மதில் சுவரும் உள்வாங்கி விரிசல்கள் விழ துவங்கி உள்ளன. ஒரு கால பூஜை மட்டும் நடைபெறுகிறது. அருகாமை ஊரில் உள்ள அர்ச்சகர் வந்து பூஜை செய்துவிட்டு செல்கிறார். ஆனால் நேரம் குறிப்பிட்டு சொல்ல இயலாது.






காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
இலுப்பூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி